தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 24,455க்கு மேலே உள்ள வரை ஏற்றம் தொடர வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 24,455க்கு மேலே உள்ள வரை ஏற்றம் தொடர வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 24,455க்கு மேலே உள்ள வரை ஏற்றம் தொடர வாய்ப்பு


UPDATED : ஆக 11, 2026 01:33 AM

ADDED : ஆக 11, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 01:33 AM ADDED : ஆக 11, 2026 01:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று 10 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி அதிகபட்சமாக 59 புள்ளிகள் வரை இறங்கியது. நாளின் இறுதியில் 13 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18-ல் 13 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டிமிட்கேப் 50' குறியீடு அதிக பட்சமாக 0.70 சதவீத உயர்வுடனும், 'நிப்டிஸ்மால்கேப்50' குறியீடு அதிக பட்சமாக 0.31 சதவீத சரிவுடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 13 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 8 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Image 1607686

இவற்றில், 'நிப்டி மிட்ஸ்மால் பைனான்சியல் சர்வீசஸ்' குறியீடு அதிக பட்சமாக 1.57 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிக பட்சமாக 1.67 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,560 நிறுவனங்களின் பங்குகளில் 1,738 ஏற்றத்துடனும்; 1,702 இறக்கத்துடனும்; 120 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

சிறிய ஏற்றத்துக்கான டெக்னிக்கல் செட் அப்பில் நிப்டி நிறைவடைந்துள்ளது. ஆர்.எஸ்.ஐ., (60.21) மற்றும் எம்.ஏ.சி.டி., இதற்கு சாதகமாக இருக்கின்றன. இருந்தாலும், 24,610-24,625 லெவல்கள் உடனடியாக எதிர்கொள்ளவேண்டிய வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கின்றது.

நிப்டி 24,625ஐ கடந்து மேலே சென்றால் 24,700-24,750வரையில் மட்டுமே செல்லும் அளவிற்கான டெக்னிக்கல் அடித்தளமே தற்போது தெரிகிறது. 24,455ல் உடனடி சப்போர்ட் இருக்கிறது.

இதைத்தாண்டி இறங்கினால் 24,415-24,385 போன்ற லெவல்களிலேயே அடுத்த சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. 24,455க்கு மேலே இருக்கும் வரை பெரிய இறக்கத்திற்கான வாய்ப்பில்லை எனலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us