உள்ளடக்கத்திற்கு செல்ல

அமெரிக்க பங்குகளில் முதலீடு ‘குரோ’ புதிய வசதி அறிமுகம்
அமெரிக்க பங்குகளில் முதலீடு ‘குரோ’ புதிய வசதி அறிமுகம்
UPDATED : அக் 25, 2026 12:00 AM
ADDED : அக் 24, 2026 10:44 PM

அ நிறம் | அளவு
மு ன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான ‘குரோ’ நிறுவனம், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் வழங்கப்பட்ட அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்யும் பிரத்யேக வசதியை தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தற்போது விரிவுபடுத்தியுள்ளது.
முக்கிய அம்சங்கள்
1 அமெரிக்க பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 10,000க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களின் பங்குகள் மற்றும் இ.டி.எப்., பண்டுகளில் முதலீடு செய்யலாம்
2 ‘ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட்’ போன்ற பெரிய நிறுவனங்களில் ஒரு முழு பங்கின் விலை அதிகமாக இருந்தாலும், பயனர்கள் தங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ப குறிப்பிட்ட பகுதி அளவு பங்கிலும் முதலீடு செய்யும் வசதி
3 இதற்கான தரகு கட்டணம் வர்த்தக மதிப்பீட்டில் 0.1 சதவீதம்
