பாதுகாப்பு துறைய।ில் ஆர்டர்கள் மவுசு அதிகரிக்கும் பங்குகள்
பாதுகாப்பு துறைய।ில் ஆர்டர்கள் மவுசு அதிகரிக்கும் பங்குகள்
UPDATED : அக் 25, 2026 12:00 AM
ADDED : அக் 24, 2026 10:44 PM
இ ந்தியாவின் பாதுகாப்பு துறை, கட்டுமானம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு, பவர் டிரான்ஸ்மிஷன் துறைகளின் முன்னணி நிறுவனங்களான ‘வெல்ஸ்பன் கார்ப், கல்பதரு புராஜெக்ட்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எல் அண்டு டி மற்றும் டிரான்ஸ்ரெயில் லைட்டிங்’ உள்ளிட்ட நிறுவனங்கள் 11,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான புதிய ஆர்டர்களை குவித்துள்ளன.
தொடர்ச்சியாக கிடைக்கும் இத்தகைய பெரிய ஆர்டர்கள், வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி உறுதியாக இருப்பதை உறுதி செய்வதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் அவர்கள் தெரிவிப்பதாவது:
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்கட்டமைப்பு மேம்பாடு, டேட்டா சென்டர்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது இந்த நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கு ஒரு சாதகமான விஷயமாகும். ஆகையால், பங்குச்சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பயன்படுத்தி, வலுவான ஆர்டர் புத்தகத்தை கொண்டுள்ள இத்தகைய தரமான நிறுவனங்களை உங்களது போர்ட்போலியோவில் சேர்க்கலாம் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
நிறுவனத்தின் பெயர் : பெறப்பட்ட ஆர்டர்கள் (ரூ.கோடியில்)*
வெல்ஸ்பன் கார்ப் : 5,500
கல்பதரு புராஜெக்ட்ஸ் : 2,349
பாரத் எலக்ட்ரானிக்ஸ் : 1,011
எல் அண்டு டி : 1,500
டிரான்ஸ்ரெயில் லைட்டிங் : 927
* தோராயமானவை
