UPDATED : அக் 25, 2026 01:58 AM
ADDED : அக் 24, 2026 10:44 PM

பங்கு சந்தை சரிவை சந்தித்து வரும் இந்த சூழலிலும், அதிக கவனம் பெறாத அல்லது விலை குறைந்துள்ள பங்குகளை கண்டறிந்து முதலீடு செய்யும் 'கான்ட்ரா பண்டுகள்' சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வியூகம்
மற்றவர்கள் தவிர்க்கும் அல்லது குறைந்த மதிப்பீடு கொண்ட பங்குகளில் முதலீடு செய்து, சந்தை சுழற்சி மாறும் போது அதிக லாபம் ஈட்டுவதே கான்ட்ரா பண்டுகளின் நோக்கமாகும். 'ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியல், பந்தன் மற்றும் மோதிலால் ஓஸ்வால்' போன்ற பண்டு நிறுவனங்கள் சமீபத்தில் புதிய கான்ட்ரா பண்டு திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளன.
ஒப்பீடு
கான்ட்ரா பண்டு பிரிவின் சராசரி ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட13 சதவீதம் வரை உள்ளது. இதற்கு மாறாக, 'லார்ஜ்கேப்' பண்டுகளின் சராசரி வருமானம் கிட்டத்தட்ட ஒன்பது சதவீதம் என்ற அளவிலேயே காணப்படுகிறது.
நெகிழ்வுத்தன்மை
கான்ட்ரா பண்டுகள் குறிப்பிட்ட சந்தை மூலதன வரம்பிற்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 'லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப்' என எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யும் நெகிழ்வுத்தன்மை இதன் மேலாளர்களுக்கு உண்டு.
டாப் 5 கான்ட்ரா பண்டுகள் (3 ஆண்டு வருமானம்)
பண்டு பெயர் : என்.ஏ.வி.,(ரூ.)* : வருமான விகிதம் (%)
இன்வெஸ்கோ இந்தியா : 148 : 13
இன்வெஸ்கோ இந்தியா- ஐ.டி.சி.டபிள்யூ., ரீஇன்வெஸ்ட்மென்ட் : 62 : 13
கோட்டக் : 167 : 13
இன்வெஸ்கோ இந்தியா -ஐ.டி.சி.டபிள்யூ., பே-அவுட் : 62 : 13
எஸ்.பி.ஐ., : 387 : 10
ஆதாரம்: ஏஞ்சல் ஒன்
* 24.10.2026 நிலவரப்படி

