
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டியூரோபிளக்ஸ் விண்ணப்பம்
பெ ங்களூரை தலைமையிடமாகக் கொண்ட மெத்தை தயாரிப்பாளரான டியூரோபிளக்ஸ், புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்து உள்ளது.
பங்குதாரர்கள் வசமுள்ள 2.25 கோடி பங்குகளுடன், புதிய பங்கு விற்பனை வாயிலாக 183.60 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதனை, 120 புதிய நேரடி விற்பனை மையங்களை அமைக்கவும், குத்தகை, வாடகை மற்றும் உரிம கட்டணம் ஆகியவற்றுக்கும், சந்தைப்படுத்தல், விளம்பர செலவுகளுக்கும் பயன்படுத்த உள்ளதாக, அதன் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.