
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேக்பிட் இனோவேஷன்ஸ்
வீட்டு அலங்கார பொருட்கள், தலையணை, மெத்தை தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் 'வேக்பிட் இனோவேஷன்ஸ்' புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்குகிறது. இந்நிறுவனம் ஐ.பி.ஓ., வாயிலாக 1,400 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க டிசம்பர் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்நிறுவன பங்குகள் டிசம்பர் 15ம் தேதி சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ்
'டெமாசெக் ஹோல்டிங்ஸ்' பிரைவேட் லிமிடெட்டின் ஆதரவு பெற்ற 'ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ்' பிரைவேட் லிமிடெட், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டு உபயோக பொருட்கள் துறையை சேர்ந்த இந்நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக, 1,700 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

