UPDATED : ஜன 14, 2026 01:35 AM
ADDED : ஜன 14, 2026 01:22 AM

பிராப்பர்டி ஷேர் டிரஸ்ட் செபியிடம் விண்ணப்பம்
![]() |
'பிராப்பர்டி ஷேர் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்' நிறுவனம், தனது மூன்றாவது திட்டமான 'பிராப்ஷேர் செலெஸ்டியா'வுக்காக 244.65 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பங்குகளை வெளியிடுகிறது. இதற்கு செபியிடம் அனுமதி கேட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த கட்டட பரப்பளவு 2.07 லட்சம் சதுர அடி, முழுதும் வாடகைக்கு விடுவதற்காக கட்டப்பட்டிருக்கிறது. இந்நிறுவன பங்குகளை மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிடப்பட்டு, செபியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
புதிய பங்கு வெளியீட்டுக்கு தயாராகும் 'ஷேடோபேக்ஸ்'
![]() |
சரக்கு போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனமான, 'ஷேடோபேக்ஸ்' 1,900 கோடி ரூபாய் மதிப்பில், ஐ.பி.ஓ., வெளியிட திட்டமிட்டுள்ளது. இதில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பங்கு வெளியீடும், 900 கோடி ரூபாய் மதிப்பில் ஆபர் பார் சேல் முறையிலும் இந்நிறுவனம் நிதியை திரட்டுகிறது. இந்த ஐ.பி.ஓ.,வுக்காக, விலை வரம்பு குறித்த அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



