ADDED : ஜன 14, 2026 01:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொ துத்துறையைச் சேர்ந்த 'பாரத் கோக்கிங் கோல்' நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கு, 146.81 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த ஐ.பி.ஓ.,வுக்கு விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என்பதால், முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
ஐ.பி.ஓ., வாயிலாக 1,071 கோடி ரூபாய் திரட்டப்படும் நிலையில், மொத்தம் 1.10 லட்சம் கோடி ரூபாய்க்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 90 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 311 மடங்கும்; நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 258 மடங்கும் விண்ணப்பிக்கப் பட்டிருந்தன. சிறு முதலீட்டாளர்கள் பிரிவு 49 மடங்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

