டெக்னிக்கல் அனாலிசிஸ் : திசை தெரியா நிலை உருவாகக்கூடும்
டெக்னிக்கல் அனாலிசிஸ் : திசை தெரியா நிலை உருவாகக்கூடும்
UPDATED : ஜன 14, 2026 01:37 AM
ADDED : ஜன 14, 2026 01:28 AM

சிறிய ஏற்ற இறக்கங்களுடன் 11:45 மணி வரை நடந்த நிப்டி, அதன் பின்னர் இறங்க ஆரம்பித்து, அடுத்து சற்று மீண்டு, நாளின் இறுதியில் 57 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது.
பரந்த சந்தை குறியீடுகள் 16-ல், 7 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 9 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால் கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.87 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ.,150' குறியீடு அதிகபட்சமாக 0.34 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 0.78 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி கன்ஸ்யுமர் டியுரபிள்ஸ்' குறியீடு, அதிகபட்சமாக 0.89 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வர்த்தகம் நடந்த 3,245 பங்குகளில், 1,585 ஏற்றத்துடனும்; 1,539 இறக்கத்துடனும்; 121 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. 20 மற்றும் 50 நாட்கள் இ.எம்.ஏ-.,வுக்கு கீழே நிப்டி வர்த்தகம் ஆவதால், சிறியதொரு இறக்கம் தொடர வாய்ப்புள்ள டெக்னிக்கல் சூழல் தென்படுகிறது. 26,000-த்திற்கு மேலே செல்லாத வரை, ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது என கூற முடியாது. 25,600-ல் ஒரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. பெரிய மாற்றம் ஏதுமில்லாமலோ அல்லது சிறிய இறக்கத்துடனோ செயல்படுவதற்கான வாய்ப்பே டெக்னிக்கலாக தற்போதைக்கு அதிகமாக தென்படுகிறது.






