
ரூ.2,600 கோடி திரட்ட வரும் 'எக்ஸிகியூட்டிவ் சென்டர் இந்தியா'
மு ம்பையைச் சேர்ந்த அலுவலக பகிர்வு சேவைகளை வழங்கி வரும், 'எக்ஸிகியூட்டிவ் சென்டர் இந்தியா', புதிய பங்கு வெளியீட்டுக்கு வர, செபி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி, சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பிரீமியம் அலுவலக பகிர்வு சேவைகளை அளித்து வருகிறது.
'ஆபர் பார் சேல்' இன்றி, முழுதும் புதிய பங்கு விற்பனை வாயிலாக 2,600 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், துணை நிறுவனங்களில், முதலீடு செய்ய உள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.
'ஷேடோபேக்ஸ்'
பங்கு விலை நிர்ணயம்
பெ ங்களூரை தலைமையிடமாக கொண்டு, இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு லாஜிஸ்டிக்ஸ் சேவைகளை வழங்கி வரும், 'ஷேடோபேக்ஸ் டெக்னாலஜிஸ்', 1,907.27 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, வரும் 20ம் தேதி புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது.
இதற்காக, பங்கு ஒன்றின் விலை 118 --124 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டும் தொகையை, நெட்வொர்க் உட்கட்டமைப்பு, பிராண்டிங், சந்தைப்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்த உள்ளது. முதலீட்டாளர்கள், பங்கு கேட்டு விண்ணப்பிக்க ஜன.22ம் தேதி கடைசி நாளாகும்.

