தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,


ADDED : ஜூலை 13, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிய பங்குகள் வெளியிட 4 நிறுவனங்களுக்கு செபி அனுமதி

ஜெட்வொர்க் புதிய பங்குகள் மற்றும் ஆபர் பார் சேல் முறையில் 4,000 கோடி முதல் 5,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

மாரி ரீடெயில் புதிய பங்குகள் வாயிலாக 522 கோடி ரூபாயும், ஆபர் பார் சேல் முறையில் 2.7 கோடி பங்குகளும் விற்பனை செய்கிறது. திரட்டப்படும் நிதியை கொண்டு, கடனை அடைக்கவும், 10 புதிய ஆடை நிலையங்கள், 3 நகைக்கடைகள் திறக்கவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டான்போ இமேஜிங் பாதுகாப்பு எலக்ட்ரானிக்ஸ் துறையை சேர்ந்த இந்நிறுவனம், முழுக்க 'ஆபர் பார் சேல்' முறையில் 1.80 கோடி பங்குகளை வெளியிடவுள்ளது.

குஜராத் விக்டரி போர்ஜிங்ஸ் 65 லட்சம் புதிய பங்குகளையும், ஆபர் பார் சேல் முறையில் 1.32 கோடி பங்குகளையும் விற்கிறது. இந்த நிதியை கொண்டு, வதோதரா ஆலையை விரிவாக்கம் செய்யவும், தாமிர கேத்தோடுகள் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், கடன்களை அடைக்கவும் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us