கோல்டு இ.டி.எப்.,களில் முதலீட்டாளர்களின் 'ஸ்மார்ட் மூவ்'
கோல்டு இ.டி.எப்.,களில் முதலீட்டாளர்களின் 'ஸ்மார்ட் மூவ்'
ADDED : ஜூலை 12, 2026 01:37 AM

கடந்த மே மாதத்தில் இந்தியாவின் தங்க இ.டி.எப்., சந்தையில் இருந்து, 725 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறிய நிலையில், ஜூன் மாதத்தில் நிலைமை தலைகீழாக மாறி, 3,443 கோடி ரூபாய் புதிய முதலீடுகள் குவிந்துள்ளதாக ஆம்பி தரவுகள் தெரிவிக்கின்றன.
தங்க இ.டி.எப்., மட்டுமின்றி, ஒட்டுமொத்த இ.டி.எப்., சந்தையிலும் முதலீடுகள் அதிகரித்து 13,238 கோடியை எட்டியுள்ளது.
சாதகமான விலை வீழ்ச்சி: சமீபத்திய தற்காலிக தங்க விலை சரிவை முதலீட்டாளர்கள் நல்வாய்ப்பாக பயன்படுத்தி, புதிய முதலீடுகளை செய்ததே, இ.டி.எப்., முதலீடுகள் உயர காரணமாகும்.
நீண்டகால முதலீட்டு திட்டம்: முதலீட்டாளர்கள் இ.டி.எப்., திட்டங்களை குறுகிய கால வர்த்தகமாக பார்க்காமல், தங்களது சொத்துக்களை நீண்டகால அடிப்படையில் பிரித்து முதலீடு செய்யும் முக்கிய முதலீட்டு கருவியாக பயன்படுத்துகின்றனர்.
சந்தைக்கு எதிரான அரண்: பங்கு சந்தையின் கடுமையான ஏற்ற இறக்கங்களை சமாளிக்கவும் , ஈக்விட்டி பங்குகளின் ஆபத்தை குறைக்கவும் பாதுகாப்பான சொத்தான தங்கத்தை முதலீட்டாளர்கள் சிறந்த அரணாக கருதுகின்றனர்.
வருங்கால சந்தை நிலவரம்: சர்வதேச வட்டி விகிதங்கள் மற்றும் டாலர் மதிப்பின் மாற்றங்களால், வரும் நாட்களில் இதில் தற்காலிக ஏற்ற இறக்கங்கள் நீடிக்கும் என, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
