ADDED : ஜூலை 25, 2026 01:18 AM

'மணிப்பால் ஹெல்த்' பங்கு வெளியீடு
'டெமாசெக்' ஆதரவு பெற்ற 'மணிப்பால் ஹெல்த் என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் 9,275 கோடி ரூபாய் மதிப்பிலான ஐ.பி.ஓ., வரும் ஜூலை 29ல் தொடங்குகிறது. ஒரு பங்கின் விலை 560-590 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் நிதியில் பெரும்பகுதி கடனை அடைக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவமனைகளின் படுக்கை பயன்பாட்டை அதிகரித்தல், புதிய படுக்கை வசதிகளை உருவாக்குதல் மற்றும் புதிய நகரங்களில் விரிவாக்கம் மேற்கொள்வதில் கவனம் செலுத்தவுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்கு வெளியிடும் 'ஜூனிப்பர் கிரீன் எனர்ஜி'
பு துப்பிக்கத்தக்க எரிசக்தி துறை யில் உள்ள 'ஜூனிப்பர் கிரீன் எனர்ஜி' நிறுவனம் புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 1,800 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இந்த ஐ.பி.ஓ.,வில், வரும் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில், முழுதும் புதிய பங்குகள் வெளியிடப்படுகிறது. ஐ.பி.ஓ.,வில் திரட்டப்படும் தொகையை கொண்டு கடனை திருப்பி செலுத்தவும், துணை நிறுவனங்களில் முதலீடு செய்யவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
