தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஐபிஓ,

ஐபிஓ,

ஐபிஓ,


ADDED : அக் 07, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2026 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹைபன் புட்ஸ்' பங்கு வெளியிட திட்டம்

மெக்டொனால்ட்ஸ், கே.எப்.சி., உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உணவு பொருட்களை வழங்கும் 'ஹைபன் புட்ஸ்' நிறுவனம், 2,000 கோடி ரூபாய் மதிப்பில் ஐ.பி.ஓ., வெளியிட திட்டமிட்டுள்ளது. 2028ம் ஆண்டு இறுதிக்குள் ஐ.பி.ஓ., வெளியிட இலக்கு நிர்ணயித்து உள்ள இந்நிறுவனம், 2027ம் ஆண்டு மத்தியில் அதற்கான பணிகளை தொடங்க உள்ளதாக தெரிவித்து உள்ளது.

ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் நிதியின் பெரும்பகுதியை, உற்பத்தி திறனை அதிகரிக்கவும், இந்திய சந்தையில் விற்பனையை விரிவுபடுத்தவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. உறையவைக்கப்பட்ட உணவுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், 2028 நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் இருமடங்குக்கும் மேலாக உயர்ந்து, கிட்டதட்ட 3,500 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

'ஸ்வரா பேபி ப்ராடக்ட்ஸ்' செபி அனுமதி

'பர்ஸ்ட்க்ரை' ஆதரவு பெற்ற குழந்தைகள் மற்றும் தனிநபர் சுகாதார பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான 'ஸ்வரா பேபி ப்ராடக்ட்ஸ்' நிறுவனம், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐ.பி.ஓ., வெளியிட செபியிடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த ஐ.பி.ஓ.,வில் 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும், ஆபர் பார் சேல் முறையில் 500 கோடி ரூபாய் மதிப்பிலும், பங்குகள் விற்பனை இடம்பெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us