தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஐபிஓ அலசல் ஜியோ பிளாட்பார்ம்ஸ்: விண்ணப்பிக்கலாமா?

ஐபிஓ அலசல் ஜியோ பிளாட்பார்ம்ஸ்: விண்ணப்பிக்கலாமா?

ஐபிஓ அலசல் ஜியோ பிளாட்பார்ம்ஸ்: விண்ணப்பிக்கலாமா?


UPDATED : அக் 21, 2026 02:12 AM

ADDED : அக் 21, 2026 02:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 02:12 AM ADDED : அக் 21, 2026 02:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிஜிட்டல் சேவைகள் மற்றும் தொழில்நுட்ப தளங்களை மையமாக கொண்டு செயல்படும் 'ஜியோ பிளாட்பார்ம்ஸ்' நிறுவனம். இதன் புரமோட்டர் 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனமாகும். இதன் துணை நிறுவனமான 'ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்' வாயிலாக மொபைல் மற்றும் பிராட்பேண்டு சேவைகளை வழங்குகிறது.

நுகர்வோருக்கான இணைய சேவை, டிஜிட்டல் பொழுதுபோக்கு, இசை, கிளவுட் சேமிப்பு, ஸ்மார்ட் ஹோம் மற்றும் ஏ.ஐ., சார்ந்த சேவைகள் என பல்வேறு பிரிவுகளில் ஜியோ செயல்படுகிறது.

மேலும், நிறுவனங்களுக்கான இணைய சேவை, கிளவுட், பாதுகாப்பு, ஐ.ஓ.டி., நெட்வொர்க் மேலாண்மை மற்றும் ஏ.ஐ., சார்ந்த தீர்வுகளையும் வழங்குகிறது.

சொந்தமாக உருவாக்கிய தொழில்நுட்பங்கள், மென்பொருள், சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகளை ஒருங்கிணைத்து, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இணைய இணைப்பை மட்டும் வழங்குவதோடு நின்று

விடாமல், அன்றாட பயன்பாட்டுக்கான பல்வேறு டிஜிட்டல் சேவைகளையும் ஒரே தளத்தின் கீழ் வழங்குகிறது.

சிறப்பம்சங்கள்


* நாடு முழுதும் விரிவான மொபைல் மற்றும் பிராட்பேண்டு சேவை வழங்கும் கட்டமைப்பு

* 4ஜி, 5ஜி தொழில்நுட்பங்களுக்கான சொந்த கட்டமைப்பு

* நெட்வொர்க், சாதன வடிவமைப்பு, மென்பொருள், இயங்குதளங்கள்

மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகளில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப திறன்

* பொழுதுபோக்கு, கிளவுட், ஸ்மார்ட் ஹோம் உள்ளிட்ட பல்வேறு

நுகர்வோர் சேவைகள்

* நிறுவனங்களுக்கான விரிவான தொழில்நுட்ப தீர்வுகள்

* 'ஜியோ பிரெய்ன்' உள்ளிட்ட சொந்த ஏ.ஐ.,/எம்.எல்., தொழில்நுட்ப

திறன்கள்

* பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தொடர்பான காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்திருப்பது.

இடர்கள்


* டிஜிட்டல் இணைப்பு சேவைகளில் 'ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்' நிறுவனத்துக்கு முக்கியத்துவம் இருப்பதால், அதன் வணிகத்தை பாதிக்கும் நிகழ்வுகள் ஜியோ பிளாட்பார்ம்ஸையும் பாதிக்கலாம்

* தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அதிகரிக்கும் போட்டி

* புதிய தொழில்நுட்பங்களுக்கு மேற்கொள்ள வேண்டிய செலவுகள் மற்றும் செயலாக்க சவால்கள்

* செயற்கைக்கோள் வழியிலான இணைய சேவைகள் வளர்ச்சியடைந்தால் போட்டி ஏற்படலாம்

* உரிமம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, விலை நிர்ணயம் மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள்

* சேவை தடைகள் அல்லது தொழில்நுட்ப கோளாறுகள்

வாடிக்கையாளரின் சேவை அனுபவத்தை பாதிக்கலாம்.

Image 1633635

கவனம்:

முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை

மேற்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள்,

நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே

முடிவெடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us