உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 21, 2026 12:00 AM
ADDED : அக் 20, 2026 10:32 PM

அ நிறம் | அளவு
ஐ .பி.ஓ., வெளியீடு உட்பட பங்கு வெளியீடுகள் தொடர்பான விதிமுறைகளை நிர்வகிக்கும் ‘ஐ.சி.டி.ஆர்.,’ ஒழுங்குமுறைகளை மறுஆய்வு செய்வதற்காக செபி ஒரு குழுவை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.சி.டி.ஆர்., ஒழுங்குமுறைகள் மறுஆய்வு செய்யப்படும் என்று செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், ஐ.பி.ஓ., எப்.பி.ஓ., ரைட்ஸ் இஷ்யூ, முன்னுரிமை பங்கு வெளியீடு உள்ளிட்ட பங்கு வெளியீடுகள் தொடர்பான விதிமுறைகளை மறுஆய்வு செய்து, அவற்றை எளிமைப்படுத்துவதற்காகவே செபி குழுவை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
