தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ ஐபிஓ, அலசல் ஓரியன்ட் கேபிள்ஸ் இந்தியா லிமிடெட்

ஐபிஓ, அலசல் ஓரியன்ட் கேபிள்ஸ் இந்தியா லிமிடெட்

UPDATED : செப் 25, 2026 04:28 AM

ADDED : செப் 25, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2026 04:28 AM ADDED : செப் 25, 2026 04:17 AM

Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நெட்வொர்க்கிங் கேபிள்கள் மற்றும் இணைப்புக்கான உபகரணங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம், தொலைத்தொடர்பு, டேட்டா சென்டர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு, மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தயாரிப்புகளை

வழங்குகிறது.

நெட்வொர்க்கிங், ஸ்பெஷாலிட்டி பவர், ஆப்டிக்கல் பைபர் கேபிள்கள், வயர் மற்றும் கேபிள் ஹார்னெஸ் உள்ளிட்ட தயாரிப்புகளை கொண்டுள்ளது. நெட்வொர்க்கிங் கேபிள் துறையில் இந்தியாவின் முன்னணி 4 நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

ஜூன் மாத இறுதியில், நெட்வொர்க்கிங், ஸ்பெஷாலிட்டி பவர் மற்றும் ஆப்டிக்கல் பைபர் கேபிள்களின் மொத்த நிறுவப்பட்ட உற்பத்தி திறன் 8,95,776 கி.மீ. ஆக இருந்தது.

சிறப்பம்சங்கள்

 நெட்வொர்க்கிங், ஆப்டிக்கல் பைபர், மின்சாரம் மற்றும் சோலார் கேபிள்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை வழங்குகிறது

 ராஜஸ்தானின் பிவான்டியில் நவீன தானியங்கி மற்றும் ரோபோட்டிக் உற்பத்தி வசதி உள்ளது; சர்வதேச தரநிலைகளையும் பின்பற்றுகிறது

 தயாரிப்புகளை மேம்படுத்தவும், புதிய தயாரிப்புகளை உருவாக்கவும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது

 என்.சி.ஆர்., பகுதியில் உள்ள உள்நாட்டு கண்டெய்னர் முனையம் அருகே உற்பத்தி ஆலை அமைந்துள்ளதால் ஏற்றுமதி செலவு மற்றும் வினியோக நேரத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது

 ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டும் நிதியை நிறுவன விரிவாக்கம் மற்றும் கடன் குறைப்புக்கு பயன்படுத்துவதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் வளர்ச்சியும் நிறுவனத்துக்கு வாய்ப்பாக உள்ளது.

இடர்கள்

 மூலப்பொருட்களுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதால், வினியோக சங்கிலி பாதிப்பு மற்றும் அந்நியச் செலாவணி மாற்றங்களால் பாதிப்பு ஏற்படலாம்

 காப்பர் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு உற்பத்தி செலவு மற்றும் லாப வரம்பை பாதிக்கலாம்

 உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கடுமையான போட்டியால் சந்தை பங்கு மற்றும் லாப வரம்பில் தாக்கம் ஏற்படலாம்

 சர்வதேச சந்தைகளில் பிராண்டு அறிமுகம் குறைவாக இருப்பதுடன், ஏற்றுமதி இறக்குமதி விதிமுறைகள் மற்றும் புவிசார் அரசியல்

மாற்றங்களால் வெளிநாட்டு விரிவாக்கத்தில் சவால்கள் ஏற்படலாம்

 பொருளாதார மந்தநிலை, உள்கட்டமைப்பு செலவின குறைவு மற்றும் சில முக்கிய வாடிக்கையாளர்களை அதிகம் சார்ந்திருப்பது

நிறுவனத்தின் விற்பனை மற்றும் வளர்ச்சியை பாதிக்கலாம்.கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நெட்வொர்க்கிங் கேபிள்கள் மற்றும் இணைப்புக்கான உபகரணங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம், தொலைத்தொடர்பு, டேட்டா சென்டர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு, மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தயாரிப்புகளை

வழங்குகிறது.

நெட்வொர்க்கிங், ஸ்பெஷாலிட்டி பவர், ஆப்டிக்கல் பைபர் கேபிள்கள், வயர் மற்றும் கேபிள் ஹார்னெஸ் உள்ளிட்ட தயாரிப்புகளை கொண்டுள்ளது. நெட்வொர்க்கிங் கேபிள் துறையில் இந்தியாவின் முன்னணி 4 நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

ஜூன் மாத இறுதியில், நெட்வொர்க்கிங், ஸ்பெஷாலிட்டி பவர் மற்றும் ஆப்டிக்கல் பைபர் கேபிள்களின் மொத்த நிறுவப்பட்ட உற்பத்தி திறன் 8,95,776 கி.மீ. ஆக இருந்தது.

சிறப்பம்சங்கள்

 நெட்வொர்க்கிங், ஆப்டிக்கல் பைபர், மின்சாரம் மற்றும் சோலார் கேபிள்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை வழங்குகிறது

 ராஜஸ்தானின் பிவான்டியில் நவீன தானியங்கி மற்றும் ரோபோட்டிக் உற்பத்தி வசதி உள்ளது; சர்வதேச தரநிலைகளையும் பின்பற்றுகிறது

 தயாரிப்புகளை மேம்படுத்தவும், புதிய தயாரிப்புகளை உருவாக்கவும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது

 என்.சி.ஆர்., பகுதியில் உள்ள உள்நாட்டு கண்டெய்னர் முனையம் அருகே உற்பத்தி ஆலை அமைந்துள்ளதால் ஏற்றுமதி செலவு மற்றும் வினியோக நேரத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது

 ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டும் நிதியை நிறுவன விரிவாக்கம் மற்றும் கடன் குறைப்புக்கு பயன்படுத்துவதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் வளர்ச்சியும் நிறுவனத்துக்கு வாய்ப்பாக உள்ளது.

இடர்கள்

 மூலப்பொருட்களுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதால், வினியோக சங்கிலி பாதிப்பு மற்றும் அந்நியச் செலாவணி மாற்றங்களால் பாதிப்பு ஏற்படலாம்

 காப்பர் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு உற்பத்தி செலவு மற்றும் லாப வரம்பை பாதிக்கலாம்

 உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கடுமையான போட்டியால் சந்தை பங்கு மற்றும் லாப வரம்பில் தாக்கம் ஏற்படலாம்

 சர்வதேச சந்தைகளில் பிராண்டு அறிமுகம் குறைவாக இருப்பதுடன், ஏற்றுமதி இறக்குமதி விதிமுறைகள் மற்றும் புவிசார் அரசியல்

மாற்றங்களால் வெளிநாட்டு விரிவாக்கத்தில் சவால்கள் ஏற்படலாம்

 பொருளாதார மந்தநிலை, உள்கட்டமைப்பு செலவின குறைவு மற்றும் சில முக்கிய வாடிக்கையாளர்களை அதிகம் சார்ந்திருப்பது

நிறுவனத்தின் விற்பனை மற்றும் வளர்ச்சியை பாதிக்கலாம்.

Image 1622774

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

      Dinamalar
      Follow us