UPDATED : டிச 08, 2025 09:26 AM
ADDED : டிச 08, 2025 09:24 AM

கடந்த 2024ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம். இன்றைக்கு பெண்கள் உடல்நலம் பேணுதல், நீரழிவு - இதய நோய்கள், வலி மேலாண்மை, சிறுநீரகவியல் மற்றும் பல்துறை சிறப்பு பிரிவுகளுக்கு தேவையான மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது. தன் தயாரிப்புகளை மொத்தம் 71 பிராண்டுகளில், 2600 க்கும் மேற்பட்ட விற்பனை பிரதிநிதிகள் வாயிலாக, நாட்டின் 22 மாநிலங்களில் சந்தைப்படுத்தி வருகிறது.
சிறப்பம்சங்கள்:
* துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்
* 71 பிராண்டுகளைக் கொண்ட மருந்துகளின் போர்ட் போலியோ
* நாடு முழுவதும் உள்ள விற்பனை பிரதிநிதிகள் மற்றும் விநியோக வசதி* மருந்துகள் பிரிவில் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் பிரிவில் கவனம் செலுத்துவது
ரிஸ்குகள்:
* ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தியை பெருமளவில் சார்ந்திருப்பதால், எப்போது வேண்டுமானாலும் ஆர்டர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு
* போட்டிகள் நிறைந்த மற்றும் விலை கட்டுப்பாடுகளைக் கொண்ட உள்நாட்டு சந்தையில் பார்முலேஷன் பிரிவில் செயல்படுகிறது
* மூலப் பொருட்களின் ஏற்படும் பாதகமான விலை மாறுதல், உற்பத்தி செலவையும் லாபத்தையும் குறைத்துவிடுவதற்கான வாய்ப்பு
கவனம்:
முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டுத்திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்க வேண்டும்.

