வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / லாபம் / ஐ.பி.ஓ., அலசல் பைன் லேப்ஸ் / ஐ.பி.ஓ., அலசல் பைன் லேப்ஸ்
/
செய்திகள்
லாபம்
ஐ.பி.ஓ., அலசல் பைன் லேப்ஸ்
UPDATED : நவ 06, 2025 11:28 AM
ADDED : நவ 05, 2025 11:00 PM
UPDATED : நவ 06, 2025 11:28 AM ADDED : நவ 05, 2025 11:00 PM
புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் பைன் லேப்ஸ் நிறுவனம், வணிகர்கள், நுகர்வோர் பிராண்டுகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு, நிதிதொழில்நுட்ப பேமென்ட் சேவையை, இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் வழங்கி வருகிறது.
சிறப்பம்சங்கள் * வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமென்ட்ஸ் சேவை துறையில் இருப்பது.* சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் சேவைகளை வழங்கி வருவது.* டீமாசேக், பீக் எக்ஸ்வி, பேபால் மாஸ்டர்கார்ட் மற்றும் ஆக்டிஸ் போன்ற முதலீட்டாளர்களின் பங்களிப்பு.* பாயின்ட் ஆப் சேல் உபகரணங்கள், கிளவுட் சர்வீசஸ் மற்றும் டெவலப்பர்களுக்கான ஏ.பி.ஐ.,-க்களை ஒருங்கிணைக்கும் சொந்தமான மென்பொருளை வைத்திருப்பது.* பரிவர்த்தனை கட்டண வருமானத்தை மட்டும் நம்பி இல்லாமல், துறை சார்ந்த டெக்னாலஜி தீர்வுகள் மற்றும் கிப்ட் கார்டுகள் மூலமும் வருமானம் பெறுதல்.
ரிஸ்க்குகள் * பேமென்ட்ஸ் சேவை துறை என்பதால், ரிசர்வ் வங்கியின் சட்ட விதிகளுக்கு ஏற்ப செயல்படாவிட்டால், நடவடிக்கை எடுக்க வாய்ப்பு.* பெரிய நிறுவனங்கள் இந்த துறையில் போட்டியாக இருப்பதால், அடுத்தடுத்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த வேண்டிய நிலை.* தொழில்நுட்ப கோளாறுகள், சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு உள்ளிட்டவற்றால் சேவைகள் முடங்கினால் பாதிப்பு.* இந்நிறுவனம் கடந்த மூன்று நிதியாண்டுகளாக நஷ்டத்தில் செயல்பட்டு வந்துள்ளது கவனம் பெறுகிறது.* சந்தை ஏற்ற இறக்கங்கள், முதலீட்டாளர்களின் சென்டிமென்ட், எதிர்பாராத பொருளாதார மந்தநிலை போன்றவை பங்குகளின் விலையில் எதிரொலிக்கும்.