sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

ஐ.பி.ஓ., அலசல்: லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ்

/

ஐ.பி.ஓ., அலசல்: லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ்

ஐ.பி.ஓ., அலசல்: லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ்

ஐ.பி.ஓ., அலசல்: லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ்


UPDATED : அக் 28, 2025 11:32 PM

ADDED : அக் 28, 2025 11:28 PM

Google News

UPDATED : அக் 28, 2025 11:32 PM ADDED : அக் 28, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண் கண்ணாடிகள், சன்கிளாஸ்கள், கான்டாக்ட் லென்ஸ்கள் போன்றவற்றை, டிசைன் மற்றும் உற்பத்தி செய்து, சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வரும் 'லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தின் 7,278 கோடி ரூபாய் அளவிலான பங்குகள் ஐ.பி.ஓ., மூலம் வெளியிடப்பட உள்ளன.

Image 1487521


வெளியிடும் முறை

ரூ.(கோடிகளில்)

புதிய பங்கு வெளியீடு

2,150.00

ஆபர் பார் சேல்

5,128.02

மொத்த மதிப்பு

7,278.02

ஐ.பி.ஓ., ஆரம்ப தேதி: 31.-10-.2025

ஐ.பி.ஓ., இறுதி தேதி: 04.-11.-2025

முக மதிப்பு: ரூ.2

விலை வரம்பு: ரூ.382 முதல் 402 வரை

விண்ணப்பிக்க குறைந்த அளவு: 37 பங்குகள்

விண்ணப்பிக்க குறைந்தபட்ச தொகை: ரூ.14,874

Image 1487525


சிறப்பம்சங்கள்:
*ஆன்லைன், சில்லரை விற்பனை கடைகள் என இரண்டும் ஒருங்கிணைந்திருப்பது
* டிசைன், உற்பத்தி, சில்லரை விற்பனை என ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் தன்வசம் வைத்திருப்பது
* ஐ.பி.ஓ.,வில் கிடைக்கும் தொகையில் வர்த்தக விரிவாக்கம், ஏ.ஐ. உடன் கூடிய வாடிக்கையாளர் சேவை மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை அதிகரிக்க திட்டமிட்டிருப்பது
* சாப்ட் பேங்க், டீமாசேக் ஏ.டி.ஐ.ஏ., மற்றும் கெடாரா கேப்பிட்டல் போன்ற முன்னணி முதலீட்டாளர்கள், நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது.



ரிஸ்க்குகள்:
* சவால்களை தரக்கூடிய ஆன்லைன் மற்றும் ஆப்லைன் போட்டி நிறுவனங்கள்
* வேகமான விரிவாக்கம் நடப்பதால் ஆகும் அதிகப்படியான செலவினங்கள்
* எதிர்பார்த்த அளவு விற்பனை நடைபெறாவிட்டால் லாபத்தில் அது தரும் பாதிப்பு
* நிறுவனர்களை பெருமளவில் சார்ந்திருப்பது; அரசின் கொள்கை முடிவுகள்
* கண்ணாடிகள் குறித்த வாடிக்கையாளர்களின் ரசனை, செலவு செய்யும் குணம், பிராண்ட் குறித்த பார்வைதனில் ஏற்படும் மாற்றங்கள்
* நாடு தழுவிய அளவில் பரவலாக இல்லாதது
* மூலப்பொருட்களுக்கு சீனாவை அதிகம் சார்ந்திருப்பது.



கவனம்:
முதலீடு செய்யும் முன் விலைமதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us