UPDATED : டிச 10, 2025 01:51 AM
ADDED : டிச 10, 2025 01:50 AM

கடந்த 2009-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், 'சிறுநீரகவியல் சிகிச்சை' மற்றும் 'டயாலிசிஸ்' போன்ற சேவைகளை இந்தியாவில் 447 நெட்வொர்க்கிளினிக்குகள் மற்றும் அயல்நாடுகளில் 43 மையங்கள் வாயிலாக வழங்கி வருகிறது. வீட்டிலேயே டயாலிசிஸ் செய்து கொள்ளும் வசதி, வாகனங்களின் வாயிலாக தரப்படும் 'டயாலிசிஸ் ஆன் வீல்ஸ், டயாலிசிஸ் ஆன் கால்' போன்ற சேவைகளை வழங்குகிறது. டயாலிசிஸ் சேவைகளை வழங்குவதில், ஆசியாவிலேயே முதலாவது நிறுவனமாகவும்உலகளவில் ஐந்தாவது பெரிய நிறுவனமாகவும் திகழ்கிறது.
![]() |
சிறப்பம்சங்கள்
* அதிகரித்து வரும் வயதானவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு ஏற்படும் சிறுநீரக பாதிப்பு
* நோயாளிகளை சென்றடைய உதவும் மிகப்பெரிய கிளினிக்குகளின் நெட்வொர்க்கை கொண்டிருப்பது
* இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் அதிக எண்ணிக்கையில் செயல்படுவது
* இந்நிறுவனத்தில் சிகிச்சைபெறும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவது
* பெரிய மருத்துவமனைகளுடன் கூட்டாக செயல்படுவதால் நம்பகத்தன்மை அதிகரிப்பு
* டெலி ஹெல்த், மொபைல் டயாலிசிஸ் ஆகிய சேவைகளை வழங்குவது
ரிஸ்க்குகள்
* கிளினிக்குகளை நிறுவி, விரிவாக்கம் செய்யும் முயற்சியால் வேகமான விரிவாக்கத்தை செய்வதற்கு வாய்ப்பு குறைதல்
* சிறிய ஊர்கள் மற்றும் கிராமங்களில் நிர்வாகச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், லாபம் குறையலாம்
* இயந்திரங்களை பராமரித்தல், புதிய தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்களுக்கு மாறுதல் போன்றவற்றிற்கு தேவைப்படும் அதிக முதலீடு
* அரசுகளின் கொள்கை முடிவுகள், மருத்துவ செலவுக்கான இழப்பீடு தொகை குறைப்பு போன்றவையும் இந்நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும்


