
மீஷோ லிமிடெட்
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட இ--காமர்ஸ் நிறுவனமான மீஷோ லிமிடெட், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது. விற்பனையாளர்களிடம் இருந்து கமிஷன் ஏதும் பெறாத நடைமுறையை கொண்டு இந்நிறுவனம் இயங்குகிறது. வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆர்டர்களை நிறைவேற்றி தருதல், விளம்பரங்கள் மற்றும் டேட்டாக்கள் வாயிலாக கிடைக்கும் வர்த்தகமே இந்நிறுவனத்திற்கு வருவாயை ஈட்டி தருகிறது.
ஐ.பி.ஓ.,
ஆரம்ப தேதி : 03--12--2025
நிறைவு தேதி: 05--12--2025
பட்டியலிடப்படும் சந்தைகள்: என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ.,
பட்டியலிடப்படும் நாள்: 10--12--2025 (உத்தேசமாக)
திரட்டப்படும் தொகை : ரூ.5,421.20 கோடி
புதிய முதலீடு: ரூ.4,250 கோடி
ஆபர் பார் சேல்: ரூ.1,171.20 கோடி
முக மதிப்பு: ரூ.1
விலை வரம்பு: ரூ.105 -111
விண்ணப்பிக்க:
குறைந்த பட்ச அளவு: 135 பங்குகள்
தொகை: ரூ. 14,985
சிறப்பம்சங்கள்:
* அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை கொண்டிருத்தல்
* இ--காமர்ஸ் வர்த்தகத்தில் செயல்படும் பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் அளவிலான பிளாட்பார்ம்
* மலிவு விலை, சுலபமாக அணுகி பொருட்களை வாங்க முடியும் என்பது போன்ற வசதி கொண்ட பிளாட்பார்ம்
* ஆர்டர்கள், விற்பனை, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
* குறைவான முதலீட்டில் அதிக விரிவாக்கங்களை செய்வதற்கான சூழல்
* குறைவான செலவு மற்றும் நிதி மேலாண்மை என்ற இரண்டையும் கவனத்துடன் கையாளும் நிர்வாக அமைப்பு
* புதிய சேவைகள் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக வருமானத்தை அதிகரித்துக் கொள்ள இருக்கும் வாய்ப்பு
ரிஸ்க்குகள்:
* நிகர நஷ்டம் மற்றும் நெகட்டிவ் கேஷ் ப்ளோவை கொண்டிருக்கும் நீண்ட கால வரலாறு
* பல ஆண்டுகள் நஷ்டத்தால் சொத்துகளை விட கடன் அதிகமாக இருக்கும் நிலைமை
* நிர்வாகத்தை மேலாண்மை செய்யும் நபர்களை பெருமளவில் சார்ந்திருத்தல்
* விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு மனதிருப்தியில்லாமை ஏற்படுதல்
* இ--காமர்ஸ் பிரிவில் தொடர்ந்து அதிகரித்துவரும் கடுமையான போட்டி
* வர்த்தக விரிவாக்கத்தில் உள்ள ரிஸ்குகள்
* எதிர்காலத்தில் சட்ட திட்டங்களில் வரும் மாறுதல்கள் மற்றும் அவற்றை கடைபிடிப்பதில் உருவாகும் சிக்கல்கள்
* வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பு; தரவுகள் கசிந்தால் ஏற்படும் சிக்கல்கள்
* எதிர்பாராத பொருளாதார மந்தநிலையால் வாடிக்கையாளர்களிடம் ஏற்படும் அத்தியாவசியமில்லாத செலவு குறித்த மனமாற்றம்
* நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் எதிர்காலம் உள்ளிட்ட அனுமானங்களின் அடிப்படையில் ஐ.பி.ஓ., விலை நிர்ணயம்; அனுமானங்கள் தவறினால் பங்குகளின் விலை பாதிக்க வாய்ப்பு
கவனம்: முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ளவேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்க வேண்டும்

