UPDATED : ஜன 08, 2026 02:26 AM
ADDED : ஜன 08, 2026 02:24 AM

கடந்த 1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனமாகும். கோக்கிங்- கோல், நான்-கோக்கிங் கோல் மற்றும் வாஷ்டு கோல் போன்றவற்றை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம், 32 சுரங்கங்களை நிர்வகித்து வருகிறது.
சிறப்பம்சங்கள்
* இந்திய கோக்கிங் கோல் உற்பத்தியில் 58.50 சதவீத பங்களிப்பு
* தரமான நிலக்கரி வளமுள்ள சுரங்கங்களை கொண்டிருத்தல்
* நீண்டகால கடன்கள் இல்லாமல் இருத்தல்
* பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியாவின் துணை நிறுவனம், முதலீடு மற்றும் கொள்கை முடிவுகளில் ஆதரவு கிடைக்க வாய்ப்பு
* இரும்பு, மின்சாரத்துக்கான உள்நாட்டு தேவை அதிகரிப்பதால், கோக்கிங் கோலிற்கான தேவை அதிகரிப்பு
* நிலக்கரியை கழுவி சுத்தம் செய்யும் ஆலைகள் மற்றும் சோலார் மின் உற்பத்திக்கு இடம் தருவதன் மூலம் வருவாய் ஈட்ட வாய்ப்பு
ரிஸ்க்குகள்
* பல சுரங்கங்கள் பழமையானவையாகவும் அவற்றின் புவியியல் அமைப்பு சிக்கலானதாகவும் இருப்பது
* நிலத்தடி சுரங்கங்களில், தீ விபத்துகளும், நிலச்சரிவு பிரச்னைகளும் ஏற்படுத்தும் செயல்பாட்டு ரீதியான சவால்கள்
* பழமையான கட்டமைப்பு மற்றும் அதனால் அதிகரிக்கும் சுரங்கம் தோண்டுவதற்கான செலவுகள்
* ஒழுங்குமுறை மற்றும் சுற்றுச்சூழல் விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம்.
* பெரும்பாலான வர்த்தகம் நிலக்கரி உற்பத்தியை சார்ந்திருப்பது.
* தனியார் உற்பத்தி செய்யும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் கோக்கிங் கோலினால் உருவாகும் போட்டி
* ஏற்றுமதி சந்தையில் உருவாகும் பாதகம் விளைவிக்கும் அளவிலான விலை மாற்றங்கள்
கவனம்:
முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்க வேண்டும்

