ஐ.பி.ஓ.,: புதிய பங்குகள் வெளியிடும் 'கியூப் ஹைவேஸ் டிரஸ்ட்'
ஐ.பி.ஓ.,: புதிய பங்குகள் வெளியிடும் 'கியூப் ஹைவேஸ் டிரஸ்ட்'
ADDED : ஜூலை 16, 2026 03:24 AM

புதிய பங்குகள் வெளியிடும் 'கியூப் ஹைவேஸ் டிரஸ்ட்'
சா லை போக்குவரத்து உள்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்து வரும் 'கியூப் ஹைவேஸ் டிரஸ்ட்' நிறுவனம், 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான 'இன்விட்' பொது பங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்த வெளியீடு முழுதாக 'ஆபர் பார் சேல்' முறையில் நடைபெறுகிறது.
நிறுவனம் தற்போது 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 36,800 கோடி ரூபாய் மதிப்பிலான 27 நெடுஞ்சாலை திட்டங்களை நிர்வகித்து வருகிறது. இந்த திட்டங்களுக்கு சராசரியாக 18 ஆண்டுகளுக்கும் மேலான குத்தகை காலம் எஞ்சியுள்ளதால், நீண்ட கால வருவாய் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பங்கு விலை வரம்பு : 151 - 152 ரூபாய்
ஐ.பி.ஓ., காலம் : ஜூலை 22 - 24.
பங்கு வெளியிட 'ஐ.ஜி.எக்ஸ்.,' செபியிடம் விண்ணப்பம்
இ யற்கை எரிவாயு வர்த்தக தளமான 'இந்தியன் கேஸ் எக்ஸ்சேஞ்ச் (ஐ.ஜி.எக்ஸ்.,)' நிறுவனம், பொது பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி வரைவு ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த ஐ.பி.ஓ., முழுமையாக 'ஆபர் பார் சேல்' முறையில் நடைபெற உள்ளது. இதன்படி, நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் (ஐ.இ.எக்ஸ்.,)' தன் வசமுள்ள 1.67 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.
தற்போது ஐ.ஜி.எக்ஸ்., நிறுவனத்தில் ஐ.இ.எக்ஸ்., 47 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளது. செபி விதிமுறைகளின்படி இந்த பங்குகளை 25 சதவீதமாக குறைக்க வேண்டியிருப்பதால், இந்த ஐ.பி.ஓ., வெளியீடு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
