பெண் தொழில்முனைவோருக்கு மியூச்சுவல் பண்டு விழிப்புணர்வு
பெண் தொழில்முனைவோருக்கு மியூச்சுவல் பண்டு விழிப்புணர்வு
UPDATED : ஜூலை 16, 2026 03:52 AM
ADDED : ஜூலை 16, 2026 03:31 AM

மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர்களுக்கான முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மியூச்சுவல் பண்டுகளின் சங்கமான ஆம்பி சென்னையில் நடத்தியது.
கிண்டியில் உள்ள 'டி.என்.ரைஸ்' அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 'ஆம்பி துணை தலைவர் மம்தா வைத்யா, ஹெர் மனிடாக்ஸ் நிறுவனர் நிசரி மகேஷ், ஹிந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸின் பொருளாதார பிரிவு தலைவர் கௌரி ராமசந்திரன், செபி ஸ்மார்ட் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், 100க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர் பங்கேற்றனர்.
சிறு தொகையாக இருந்தாலும் தொடர்ந்து முதலீடு செய்யும் பழக்கத்தை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என மம்தா வைத்யாவும், தொழிலில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை தொடர்ந்து முதலீடு செய்யும் பழக்கத்தை பெண் தொழில்முனைவோர் உருவாக்கி கொள்ள வேண்டும் என கௌரி ராமசந்திரனும் வலியுறுத்தினர்.
தொடர்ச்சியாக, மியூச்சுவல் பண்டுகளின் அடிப்படைகள், கே.ஒய்.சி., நடைமுறைகள் உள்ளிட்டவைகள் பற்றி செபி ஸ்மார்ட் பயிற்றுநர்கள் கீர்த்திகா வரதராஜன் மற்றும் மோகன்குமார் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு முதலீட்டாளர் கல்வியும், செயல்முறை வழிகாட்டுதலும் வழங்கப்படுவதன் வாயிலாக, அவர்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட முதலீட்டு வாய்ப்புகளில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கப்படும் என 'டி.என்.ரைஸ் தலைமை செயல் அதிகாரியும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தலைமை இயக்க அதிகாரியுமான வி.ஆர். சுப்புலட்சுமி' கருத்து தெரிவித்தார்.
