தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐ.பி.ஓ.,

ஐ.பி.ஓ.,

ஐ.பி.ஓ.,


UPDATED : ஆக 06, 2026 03:36 AM

ADDED : ஆக 06, 2026 03:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2026 03:36 AM ADDED : ஆக 06, 2026 03:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மோல்பியோ டயக்னாஸ்டிக்ஸ்'

மருத்துவ பரிசோதனை உபகரணங்களை தயாரிக்கும் 'மோல்பியோ டயக்னாஸ்டிக்ஸ்' நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி நிறைவடைகிறது.இதில், புதிய பங்குகள் வெளியீட்டின் வாயிலாக 200 கோடி ரூபாயும், ஆபர் பார் சேல் முறையில் 91.66 லட்சம் பங்குகளும் விற்பனைக்கு வருகின்றன. திரட்டப்படும் நிதியை கொண்டு ஆராய்ச்சி மையம், உற்பத்தி வசதி விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன பங்குகள் ஆகஸ்ட் 17ம் தேதி பங்கு சந்தைகளில் பட்டியலிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

பங்கு விலை வரம்பு : ரூ.768 - ரூ.807

திரட்டப்படும் நிதி : ரூ.940 கோடி

'மில்கி மிஸ்ட்'

தமிழ்நாட்டை சேர்ந்த பால் பொருட்கள் தயாரிப்பில் உள்ள 'மில்கி மிஸ்ட்' நிறுவனம் புதிய பங்கு வெளியீடு வாயிலாக 1,553 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே 2,035 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், ஐ.பி.ஓ., வெளியீட்டுக்கு முன்னதாக முதலீடு கிடைத்ததால் வெளியீட்டு அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இதில், புதிய பங்குகள் வெளியீடு வாயிலாக 1,428 கோடி ரூபாயும், ஆபர் பார் சேல் வாயிலாக 125 கோடி ரூபாயும் திரட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த ஐ.பி.ஓ.,வில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். திரட்டப்படும் நிதியை கொண்டு கடனை திருப்பி செலுத்துதல், பெருந்துறை தொழிற்சாலை விரிவாக்கம் மற்றும் வினியோக வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிறுவன பங்குகள் ஆகஸ்ட் 18ம் தேதி பங்கு சந்தையில் பட்டியலாக உள்ளது.

'துாத் டிரான்ஸ்மிஷன்'

வாகனங்களுக்கான வயரிங் ஹாரன்ஸ் மற்றும் மின் பாகங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் 'துாத் டிரான்ஸ்மிஷன்', ஐ.பி.ஓ., வாயிலாக 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டிருக்கிறது. இதில் புதிய பங்குகள் வெளியீடு மற்றும் தற்போதைய பங்குதாரர்களின் பங்கு விற்பனை ஆகியவை அடங்கும்.

ஐ.பி.ஓ., காலம்: ஆகஸ்ட் 10 --12 வரை

பட்டியலிடப்படும் நாள்: ஆகஸ்ட் 17

பங்கு விலை வரம்பு: ரூ.829 - 871

குறைந்தபட்ச முதலீடு: ரூ.14,807

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us