ADDED : ஜூலை 06, 2026 02:19 AM

பங்கு வெளியிடும் 'லேசர் பவர் & இன்ப்ரா'
மி ன்சார கேபிள்கள் மற்றும் கண்டக்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கொல்கட்டாவை சேர்ந்த 'லேசர் பவர் அண்டு இன்ப்ரா' நிறுவனம், புதிய பங்குகள் மற்றும் ஓ.எப்.எஸ்., வாயிலாக 742 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஐ.பி.ஓ., வெளியீடு வரும் ஜூலை 9 முதல் 13 வரை நடைபெறுகிறது . புதிய பங்கு வெளியீடு வாயிலாக திரட்டப்படும் 542 கோடி ரூபாயில், 490 கோடி ரூபாய் கடனைத் திருப்பி செலுத்தவும், மீதமுள்ள தொகையை நிறுவன தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.5,000 கோடி திரட்டும் 'கியூப் ஹைவேஸ் டிரஸ்ட்'
இ ந்தியாவின் 12 மாநிலங்களில் 8,754 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை சொத்துக்களை நிர்வகித்து வரும் 'கியூப் ஹைவேஸ் டிரஸ்ட்' நிறுவனம், முழுமையாக ஓ.எப்.எஸ்., முறையில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐ.பி.ஓ.,வை இந்த மாதமே வெளி யிட திட்டமிட்டுள்ளது.
இதன் வாயிலாக, புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதுடன், சந்தையில் பணப்புழக்கத்தை மேம்படுத்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
