ADDED : ஜூலை 30, 2026 06:29 AM
முதல் நாளில் 15% விண்ணப்பம்
'ம ணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் 9,275 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டின் முதல் நாளான நேற்று, 15 சதவீத பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
சிறு முதலீட்டாளர்கள் ஒதுக்கீட்டில், 25 சதவீத பங்குகளுக்கும், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் ஒதுக்கீட்டில், 14 சதவீத பங்குகளுக்கும், உயர் நிகர மதிப்புடைய முதலீட்டாளர்கள் ஒதுக்கீட்டில், 7 சதவீத பங்குகளுக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டில் 89 சதவீதம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு பங்கின் விலை, 560 ரூபாய் முதல் 590 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக, 25 பங்குகள் கொண்ட ஒரு லாட்டுக்கு விண்ணப்பிக்க, 14,750 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்த ஐ.பி.ஓ.,வுக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம். பங்குகள் ஆகஸ்ட் 5ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
