தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,


ADDED : ஆக 22, 2026 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 01:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

150 கோடி ரூபாய் திரட்டும் 'நோபல் ஹைஜீன்'

கு வாட்ரியா கேபிட்டல் ஆதரவு பெற்ற 'நோபல் ஹைஜீன்' நிறுவனம் ஐ.பி.ஓ., வாயிலாக நிதி திரட்ட செபியிடம் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதில், 150 கோடி ரூபாய் வரை புதிய பங்கு வெளியீடும், 1.55 கோடி பங்குகளை ஆபர் பார் சேல் முறையில் விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய பங்கு வெளியீட்டில் கிடைக்கும் நிதியை கடனை திருப்பி செலுத்தவும், துணை நிறுவனத்தில் முதலீடு செய்யவும், குஜராத்தின் ஹலோலில் உற்பத்தி திறனை விரிவுபடுத்தவும் பயன்படுத்த உள்ளது. 'பிரென்ட்ஸ், டெட்டி, பி-பிட், ஸ்னக்கி உள்ளிட்ட பிராண்டுகளில் பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சுகாதார பொருட்களை இந்நிறுவனம் விற்பனை செய்கிறது.

450 கோடி ரூபாய் திரட்டும் 'ஆட்டம்பெர்க் டெக்னாலஜீஸ்'

வீ ட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பில் உள்ள 'ஆட்டம்பெர்க் டெக்னாலஜீஸ்' நிறுவனம் ஐ.பி.ஓ., வாயிலாக நிதி திரட்ட செபியிடம் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதில், 450 கோடி ரூபாய் வரை புதிய பங்கு வெளியீடும், 7.65 கோடி பங்குகள் வரை ஆபர் பார் சேல் முறையில் விற்பனையும் இடம்பெறும்.

மிக்சர் கிரைண்டர், தண்ணீர் சுத்திகரிப்பான், குளிர்பதன முறையில் தயாரிக்கப்படும் ஜூசர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது.

700 கோடி ரூபாய் திரட்டும் 'லுாமினோ இண்டஸ்டிரீஸ்'

மின்சார பரிமாற்றம் மற்றும் வினியோக துறைக்கான கண்டக்டர்கள், மின் கேபிள்கள், வயர்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் 'லுாமினோ இண்டஸ்டிரீஸ்' நிறுவனம் பங்கு வெளியீடு வாயிலாக 700 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. ஐ.பி.ஓ.,வில் விண்ணப்பிக்க கால அவகாசம் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பங்கின் விலை 78 ரூபாய் முதல் 82 ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய பங்கு வெளியீட்டில் கிடைக்கும் நிதியை கொண்டு கடனை திருப்பி செலுத்தவும், உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்கவும், ஏற்கனவே உள்ள உற்பத்தி ஆலையை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us