தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,


ADDED : ஆக 23, 2026 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 02:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெமினி எடிபிள்ஸ் அண்டு பேட்ஸ்

சமையல் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், 'ஜெமினி எடிபிள்ஸ் அண்டு பேட்ஸ்' நிறுவனம், புதிய பங்குகள் வெளியிட செபியிடம் வரைவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த ஐ.பி.ஓ., வாயிலாக வெளியிடப்படும் 4.11 கோடி பங்குகளும், 'ஆபர் பார் சேல்' முறையில் வெளியிடப்பட உள்ளன. 'பிரீடம்' எனும் பெயரில் சமையல் எண்ணெய்களை விற்பனை செய்து வரும் இந்நிறுவனம், 2026 நிதியாண்டில் 12,650 கோடி ரூபாய் செயல்பாட்டு வருவாயை பதிவு செய்துள்ளது.

ஆன்லைன் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்

டிஜிட்டல் தொழில்நுட்ப சாதன சேவைகளை வழங்கி வரும் பெங்களூரை சேர்ந்த 'ஆன்லைன் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்' நிறுவனம், புதிய பங்குகள் வெளியிட செபி ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 750 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளும், 57.10 லட்சம் பங்குகள் 'ஆபர் பார் சேல்' முறையிலும் விற்பனை செய்யப்பட உள்ளன.

புதிய பங்குகள் வெளியீடு வாயிலாக திரட்டப்படும் நிதியில், 160 கோடி ரூபாய் நிறுவனத்தின் கடன்களை அடைப்பதற்காகவும், 330 கோடி ரூபாய் மூலதன தேவைகளுக்காகவும், மீதி தொகை இதர தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ரேஸ் ஆப் பிலீவ் லிமிடெட்

குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வரும், 'ரேஸ் ஆப் பிலீவ்' நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், 52.30 லட்சம் புதிய பங்குகள் வெளியிடப்பட உள்ளன. இந்த ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் நிதியில், 34.99 கோடி ரூபாய் புதிய சேவை மையங்களை அமைப்பதற்கும், 1.93 கோடி ரூபாய் சிகிச்சை பொருட்களுக்கான பராமரிப்புக்காகவும், 4.44 கோடி ரூபாய் தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.பி.ஓ., வரும் செப்., 1ம் தேதி தொடங்கி செப்., 3ல் முடிவடையும்.

ரூ.700 கோடி திரட்டும் 'லுமினோ இண்டஸ்ட்ரீஸ்'

மின் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், 'லுமினோ இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம், ஐ.பி.ஓ., வெளியீடு வாயிலாக 700 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளும், 200 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் 'ஆபர் பார் சேல்' முறையிலும் வெளியிடப்பட உள்ளன. இதன் வாயிலாக திரட்டப்படும் நிதியில், 337 கோடி ரூபாய் நிறுவனத்தின் கடன்களை அடைப்பதற்காகவும், 15 கோடி ரூபாய் நிறுவனத்தின் விரிவாக்கம், புதிய இயந்திரங்கள் வாங்குதல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.ஓ., காலம்: ஆகஸ்ட் 27 - 31 வரை

விலை வரம்பு: ரூ.78 - 82

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us