UPDATED : நவ 08, 2026 02:18 AM
ADDED : நவ 08, 2026 01:45 AM

4 நிறுவனங்களுக்குசெபி ஒப்புதல்
ஐ.பி.ஓ., வெளியிட்டு நிதி திரட்டுவதற்கு நான்கு நிறுவனங்களுக்கு செபி
ஒப்புதல் வழங்கி உள்ளது. சாகர் டிபென்ஸ் இஞ்சினியரிங் என்கியூப்
எத்திக்கல்ஸ் அர்ஜுன் ஜூவல்லர்ஸ் ஐ.எப்.எல்., பைனான்ஸ்
'ஹிந்துஸ்தான் கோக-கோலா'
குளிர்பானங்களை வணிகம் செய்து வரும் 'ஹிந்துஸ்தான் கோக-கோலா ஹோல்டிங்ஸ்' நிறுவனம் ஐ.பி.ஓ., வெளியிடுவதற்காக செபியிடம்
விண்ணப்பித்துள்ளது. முழுக்க ஓ.எப்.எஸ்., முறையில் நிறுவனத்தின்
புரமோட்டரான 'ஹிந்துஸ்தான் கோக-கோலா ஓவர்சீஸ் ஹோல்டிங்ஸ்'
நிறுவனம் கிட்டத்தட்ட 99.75 கோடி பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளது.
'ஐ.எல்., - ஜே.ஐ.என்., எலக்ட்ரானிக்ஸ்'
மின்னணு பொருட்களை தயாரிக்கும் 'ஐ.எல்., - ஜே.ஐ.என்., எலக்ட்ரானிக்ஸ்' கிட்டத்தட்ட 2,500 கோடி ரூபாய்க்கு ஐ.பி.ஓ., வெளியிட செபியிடம்
விண்ணப்பித்துள்ளது. முழுக்க புதிய பங்குகளை மட்டும் வெளியிடுவதற்கு நிறுவனம் திட்டமிட்டுஉள்ளது.
'எஸ்.என்.வி.ஏ., டிராவல்டெக்'
ஆன்லைனில் பயண சேவைகளை வழங்கி வரும் 'எஸ்.என்.வி.ஏ.,
டிராவல்டெக்' நிறுவனம் ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கான திருத்தப்பட்ட
விண்ணப்பத்தை செபியிடம் தாக்கல் செய்துள்ளது. முழுதும் ஓ.எப்.எஸ்., முறையில் 12.75 கோடி பங்குகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டு
உள்ளது.

