தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஐபிஓ

ஐபிஓ

ஐபிஓ


ADDED : அக் 03, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2026 03:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டென்மார்க்கை சேர்ந்த 'கார்ல்ஸ்பெர்க்' நிறுவனம் உட்பட, 4 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடு வாயிலாக நிதி திரட்ட செபி அனுமதி அளித்துள்ளது.

கார்ல்ஸ்பெர்க் இந்தியா

டென்மார்க்கை சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனமான 'கார்ல்ஸ்பெர்க்' குழுமத்தின் இந்திய துணை நிறுவனம், ஐ.பி.ஓ., வெளியிட செபியிடம் ரகசிய முறையில் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. எனவே, திரட்டப்படும் தொகை உள்ளிட்ட விரிவான விபரங்கள் வெளியாகவில்லை.

டி.எம்.சி., டிரான்ஸ்பார்மர்ஸ்

குஜராத்தை சேர்ந்த இந்நிறுவனம் புதிய பங்குகள் வெளியீட்டு வாயிலாக மட்டுமே, 550 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. திரட்டப்படும் நிதியானது, குஜராத் மாநிலத்தில் 78,000 எம்.வி.ஏ., திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் உற்பத்தி ஆலை அமைக்கவும், நிறுவனத்தின் மூலதன தேவைகளுக்கும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஜின் பார்மா

மும்பையை சேர்ந்த இந்நிறுவனம், 1.18 கோடி புதிய பங்குகளையும், 72.82 லட்சம் பங்குகளை 'ஆபர் பார் சேல்' முறையிலும் வெளியிட உள்ளது. திரட்டப்படும் நிதியில், 61.70 கோடி ரூபாயை 'அல்ட்ரா அக்ரோ-கெம்' நிறுவனத்திலும், 21.60 கோடி ரூபாயை 'அல்ட்ரா பார்மா-கெம்' நிறுவனத்திலும் முதலீடு செய்து, அவற்றை துணை நிறுவனங்களாக மாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதங்கி ரப்பர்

டில்லியை சேர்ந்த இந்நிறுவனம், வாகன டயர், டியூப் மற்றும் ரப்பர் உதிரிபாகங்களை தயாரித்து வினியோகம் செய்கிறது. ஐ.பி.ஓ., வாயிலாக 57.61 லட்சம் புதிய பங்குகளையும், 15.15 லட்சம் பங்குகள் 'ஆபர் பார் சேல்' முறையிலும் வெளியிட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us