உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 26, 2026 11:22 PM

அ நிறம் | அளவு
'ஐ . ஆர்.எப்.சி., ஓ.எப்.எஸ்.,' வெளியீடு வாயிலாக அரசுக்கு கிட்டத்தட்ட 2,100 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஜூன் 24 - 25 தேதிகளில் ஐ.ஆர்.எப்.சி., நிறுவனத்தின் 2 சதவீத பங்குகளை ஓ.எப்.எஸ்., முறையில் மத்திய அரசு வெளியிட்டது.
ஒரு பங்கின் அடிப்படை விலை 91 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், மொத்தம் 22.88 கோடி பங்குகள் 2,084 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஓ.எப்.எஸ்., வெளியீட்டுக்கு சிறு முதலீட்டாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிக டிமாண்டு இருந்ததால் 'கிரீன்ஷூ' உரிமையை பயன்படுத்தி கூடுதலாக 1 சதவீத பங்குகள் வெளியிடப்பட்டு உள்ளன.
