முதலீட்டு மேலாண்மை சேவைகள் அசுர வளர்ச்சி ஆபத்தானதா?
முதலீட்டு மேலாண்மை சேவைகள் அசுர வளர்ச்சி ஆபத்தானதா?
UPDATED : அக் 30, 2025 01:27 PM
ADDED : அக் 30, 2025 02:08 AM

கடந்த 10 ஆண்டுகளில், நம் நாட்டில் முதலீட்டு மேலாண்மை சேவைகள் துறை பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. செபி ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்தியது, தொழில்நுட்ப செலவுகளைக் குறைத்தது உள்ளிட்ட காரணங்களால், பி.எம்.எஸ்., எனும் 'போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ்' மற்றும் ஏ.ஐ.எப்., எனும் 'ஆல்ட்டர்னேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் பண்டு'கள் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு 'ஆம்பி' ஏற்படுத்திய விழிப்புணர்வு பிரசாரமும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. அதேநேரம் இந்த அபரிமிதமான வளர்ச்சி, ஆரோக்கியமானதா அல்லது ஆபத்தானதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
வளர்ச்சிக்கான காரணங்கள்
 
* ஏ.ஐ.எப்., மற்றும் பி.எம்.எஸ்., போன்றவை பெரும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே என்ற நிலையில் மாற்றம்.
* 2020-2021 காளைச் சந்தை கொடுத்த தைரியம்.
* வாய்ப்பை தவறவிட்டு விடுவோமோ என்ற பயம்.
இது என்ன? 
 

