சரிவு காணும் ஐ.டி., நிறுவன பங்குகள்; மாற்றி யோசிக்கும் பண்டு மேனேஜர்கள்
சரிவு காணும் ஐ.டி., நிறுவன பங்குகள்; மாற்றி யோசிக்கும் பண்டு மேனேஜர்கள்
ADDED : ஜூன் 30, 2026 06:40 AM

ஐ.டி., துறை பங்குகள் சமீபகாலமாக கடுமையாக சரிந்த போதிலும், மியூச்சுவல் பண்டு மேனேஜர்கள் ஐ.டி., பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர்.
நடப்பாண்டின் ஜூன் 15ம் தேதி வரை, அன்னிய முதலீட்டாளர்கள் 33,534 கோடி ரூபாய்க்கு, ஐ.டி., பங்குகளை விற்றுள்ளனர். நடப்பு ஆண்டில் ஜூன் 29ம் தேதி வரை நிப்டி ஐ.டி., குறியீடு 28.63 சதவீதம் சரிந்துள்ளது. எனினும், பண்டு மேனேஜர்களோ முரண்பாட்டு முதலீடாக ஐ.டி., பங்குகளில் தாராளமாக முதலீடு செய்துள்ளனர்.
'வேல்யூ ரிசர்ச்' நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, மியூச்சுவல் பண்டுகள், நடப்பாண்டு மே 31ம் தேதி வரை ஐ.டி., பங்குகளில் கிட்டத்தட்ட 1.30 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.
காரணங்கள்:
* ஐ.டி., நிறுவனங்கள் சராசரியாக 6-7 சதவீத டிவிடெண்டு வருமானம் தருகின்றன
* கிட்டத்தட்ட 10-11 சதவீத 'ப்ரீ கேஷ் ப்ளோ' கொண்டுள்ளன
* அமெரிக்க டாலரில் வருவாய் ஈட்டுவதால், ரூபாய் மதிப்பு சரிவின் வாயிலாக பலன் கிடைக்கும்
* லார்ஜ்கேப் ஐ.டி., பங்குகள் குறைந்த மதிப்பீட்டில் வர்த்தகமாகின்றன
* தொழில் அடிப்படைகளில் பெரிய சரிவில்லை
* ஐ.டி., சேவை ஏற்றுமதி வாயிலாக அதிக வருமானம் கிடைக்கிறது
* ஏ.ஐ., தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர் நிறுவனங்கள் அமல்படுத்துவதற்கு, ஐ.டி., நிறுவனங்களின் ஆதரவு தேவை
* ஏ.ஐ., தாக்கத்தை லார்ஜ்கேப் ஐ.டி., நிறுவனங்களால் சமாளிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு.
இடர்கள்
* பண்டு மேனேஜர்கள் வாங்கினாலும் கூட, ஐ.டி., பங்குகளின் சரிவு தொடருவதற்கு வாய்ப்புள்ளது
* ஏ.ஐ., தாக்கம் பற்றிய தெளிவின்மை
* வருவாயில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இல்லை
* ஐ.டி., சேவைகளுக்கு ஏற்கனவே சரிந்த டிமாண்டில் பெரிய முன்னேற்றம் இல்லை
* வருவாயில் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு
* ஏ.ஐ., சார்ந்த செய்திகளால் ஐ.டி., பங்குகளில் அதீத ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும்.
