தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

 சந்தை துளிகள்


ADDED : ஜூன் 30, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 06:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோட்டக் மஹிந்திரா பங்குகள் 3% சரிவு



'கோட்டக் மஹிந்திரா' வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அசோக் வாஸ்வானி தனது பதவிக்காலம் முடிந்தவுடன் விலக போவதாக அறிவித்ததை அடுத்து, நேற்று காலை வர்த்தகத்தில் வங்கியின் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிவை சந்தித்தன.

நேற்றைய வர்த்தக நிறைவில் இவ்வங்கி பங்கு 3.30 சதவீதம் சரிந்து 395.50 ரூபாயாக குறைந்தது.

பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் பங்குகள் 11% வீழ்ச்சி



ஜெர்மனியை சேர்ந்த 'நகாரோ' எனும் டிஜிட்டல் இன்ஜினியரிங் நிறுவனத்தை 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' நிறுவனம் முழுதுமாக கைப்பற்ற போவதாக அறிவித்தது. இதனை அடுத்து, இந்நிறுவனத்தின் பங்குகள், நேற்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 12 சதவீதம் வரை சரிந்து 4,298.50 ரூபாயானது.

ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் பங்குகள் 8% உயர்வு



'ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ்' நிறுவனம், 'ஆந்த்ரோபிக்' எனும் ஏ.ஐ., நிறுவனத்துடன், புதிய வணிக ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து, நேற்று வர்த்தக இடையில் இந்நிறுவன பங்கு விலை 8 சதவீதம் வரை உயர்ந்தது. இறுதியில் 4.96 சதவீத உயர்வுடன் 519.40 ரூபாயாக நிலைபெற்றது.

8% சரிவு கண்ட 'ஆஸ்ட்ரல்' பங்குகள்



'ஆஸ்ட்ரல்' நிறுவனம் தன் கெமிக்கல்ஸ் வணிகத்தை தனியாக பிரித்து புதிய நிறுவனமாக பட்டியலிட நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால், நிறுவனத்தின் நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினங்களில் தெளிவற்ற சூழல் நிலவலாம் என ஜே.பி., மோர்கன் உள்ளிட்ட சில தரகு நிறுவனங்கள் கலவையான கருத்துக்களை வெளியிட்டன.

இதனால், நிறுவனத்தின் பங்கு விலை நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் 8 சதவீதம் சரிந்து 1,368 ரூபாயாக நிலைபெற்றது.

ராம்கோ சிஸ்டம்ஸ் பங்குகள் 12% உயர்வு



'ராம்கோ சிஸ்டம்ஸ்' நிறுவனத்தின் பங்குகள், நேற்றைய வர்த்தகத்தில் 12 சதவீதம் வரை உயர்ந்து, அதன் 52 வார புதிய உச்சமான 836.90 ரூபாயை தொட்டது. வர்த்தகத்தின், இறுதியில், 793.75 ரூபாயாக நிலைபெற்றது.

கடந்த ஒரு மாதத்தில், இந்நிறுவன பங்கு 75 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us