முதலீட்டு வங்கி துறையில் கால் பதிக்கும் 'ஜீரோதா'
முதலீட்டு வங்கி துறையில் கால் பதிக்கும் 'ஜீரோதா'
ADDED : ஜூன் 30, 2026 06:37 AM

பங்கு தரகு நிறுவனமான ஜீரோதா, முதலீட்டு வங்கி துறையில் கால்பதிக்க தயாராகி வருகிறது.
இதற்காக, 'ஜீரோதா கார்ப்பரேட் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் 'கேட்டகிரி 1 மெர்ச்சன்ட் பேங்கிங்' உரிமம் கோரி செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
இந்தியாவில் ஐ.பி.ஓ., வெளியீடுகளுக்கான சந்தை மிகவும் வலுவாக வளர்ந்து வரும் இந்த சூழலில், கார்ப்பரேட் நிதி சேவைகளை நோக்கி தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த முக்கிய உத்தியை நிறுவனம் கையில் எடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமே சமர்ப்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பத்தை தற்போது செபி பரிசீலித்து வருகிறது.
இந்த தகவலை ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ள ஜீரோதா நிர்வாகம், செபியிடமிருந்து உரிய அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் கிடைத்தவுடன் தங்களின் விரிவான வணிக திட்டங்களை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளது.
சிறு முதலீட்டாளர்களுக்கான நிதி சேவைகளை தொடர்ந்து மேம்படுத்தி வரும் ஜீரோதா, சமீபத்தில்தான் தனது 'காயின்' தளத்தில் பிக்சட் டிபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது கார்ப்பரேட் நிதி சந்தையையும் குறிவைத்து தனது எல்லையை விரிவுபடுத்தியிருப்பது வணிக உலகில் உற்றுநோக்கப்படுகிறது.
