தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ பெரிய ஏற்றத்துக்கான வாய்ப்பு தற்போது குறைவு

 பெரிய ஏற்றத்துக்கான வாய்ப்பு தற்போது குறைவு

 பெரிய ஏற்றத்துக்கான வாய்ப்பு தற்போது குறைவு


ADDED : ஜூன் 30, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நே ற்று 5 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, 59 புள்ளிகள் வரை உயர்ந்தது. மதியத்தில் இருந்து இறங்கிய நிலையில், நாளின் இறுதியில் 109 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிகபட்சமாக 0.28 சதவீதமும், 'நிப்டி ஸ்மால்கேப்50' குறியீடு அதிகபட்சமாக 0.66 சதவீதமும் இறங்கி நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 6 குறியீடுகள் உயர்வுடனும்; 15 குறியீடுகள் சரிவுடனும் காணப்பட்டன. இவற்றில், 'நிப்டி பார்மா' குறியீடு அதிகபட்சமாக 1.03 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மிட்ஸ்மால் ஐ.டி., அண்டு டெலிகாம்' குறியீடு அதிகபட்சமாக 2.20 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,470 நிறுவனங்களின் பங்குகளில் 1,329 ஏற்றத்துடனும்; 2,036 இறக்கத்துடனும்; 105 மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்திருந்தன.

நிப்டி டெக்னிக்கலாக சிறிதளவு புல்லிஷாக இருக்கிறது. 14, 21 மற்றும் 50 நாள் சராசரிகள் மற்றும் 'இச்சிமோகு கிளவ்டு'க்கு மேலே நிறைவடைந்திருப்பது, சூழல் எதிர்மறையாக இருக்க வாய்ப்பு குறைவு என்பதை காட்டுகிறது.

மேலும், 200 நாள் (இ.எம்.ஏ.,) சராசரிக்கு கீழே இருப்பது மட்டுமே பெரிய அளவிலான ஏற்றத்துக்கு வாய்ப்பு குறைவு என்பதற்கு கட்டியம் கூறுவதாக உள்ளது. எம்.ஏ.சி.டி., - ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஆர்.ஓ.சி., போன்ற மொமெண்டம் இண்டிகேட்டர்கள் மொமெண்டம் குறைந்து, சமநிலையை அடைந்துள்ளது என்பதை காட்டுவதால் ஏற்றத்திற்கான வேகம் குறைவாக உள்ளது.

எனவே, நிப்டி பெரிய மாற்றம் ஏதுமில்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. 24,020 - 24,120 எனும் லெவல்களுக்கு மேலே சென்றால் 24,250 வரையிலும், 23,920 - 23,870 லெவல்களுக்கு கீழே சென்றால் 23,665 வரையிலும் சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

டெக்னிக்கல் சிக்னல்களின் அடிப்படையில் மேல்நோக்கி நகர்வதற்கான வலுவான ஆதரவு தற்போது இல்லை. எனவே நிப்டி கன்சாலிடேஷன் நிலையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

29-06-2026

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

டாடா ஸ்டீல் 189.90 1.19

என்.டி.பி.சி., 355.00 2.95

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 797.05 0.75

ஓ.என்.ஜி.சி., 234.10 1.00

கோட்டக் மஹிந்திரா பேங்க் 397.00 -12.00

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

எஸ் பேங்க் 25.08 0.21

என்.ஹெச்.பி.சி., 81.61 2.21

ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 109.85 1.41

சுஸ்லான் எனர்ஜி 57.40 0.26

அசோக் லேலண்டு 157.75 -2.93

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

என்.பி.சி.சி., (இந்தியா) 104.36 -2.81

ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் 675.00 -3.10

பந்தன் பேங்க் 202.04 0.28

ஆர்.பி.எல்., பேங்க் 366.00 -5.05

ஐநாக்ஸ் விண்டு 88.21 -1.31

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

பி.ஹெச்.இ.எல்., 413.90 11.20

சென்னை பெட்ரோலியம் 1,152.10 49.90

கரூர் வைஸ்யா பேங்க் 299.25 8.75

லாரஸ் லேப்ஸ் 1,487.60 37.60

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா 174.00 3.21

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 24,061.75 24,120.00 23,924.55 23,946.25

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us