தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/கரடியை சமாளித்து கரையேறிய ஐ.டி., பங்குகள் சென்செக்ஸ் உச்சத்தில் இருந்து 1,400 புள்ளிகள் சரிவு

கரடியை சமாளித்து கரையேறிய ஐ.டி., பங்குகள் சென்செக்ஸ் உச்சத்தில் இருந்து 1,400 புள்ளிகள் சரிவு

கரடியை சமாளித்து கரையேறிய ஐ.டி., பங்குகள் சென்செக்ஸ் உச்சத்தில் இருந்து 1,400 புள்ளிகள் சரிவு


UPDATED : அக் 22, 2026 02:28 AM

ADDED : அக் 21, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 02:28 AM ADDED : அக் 21, 2026 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்செக்ஸ் நேற்றைய உச்சத்தில் இருந்து கிட்டத்தட்ட 1400 புள்ளிகள் சரிந்தபோதிலும், ஐ.டி., பங்குகள் 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.

நேற்று வர்த்தகம் தொடக்கத்தில் சென்செக்ஸ் உயர்ந்தபோதிலும், பின்னர் படிப்படியாக இறங்கி நேற்றைய உச்சத்தில் இருந்து 1400 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. வர்த்தக முடிவில் 973 புள்ளிகள் இறங்கியுள்ளது. ஐ.டி., துறை தவிர பிற பெரும்பாலான துறைகள் சரிந்துள்ளன.

காரணங்கள்



1 ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் அதிகரித்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 110 டாலரை தாண்டியுள்ளது. இதனால், பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் உருவாகி உள்ளது

2 நிப்டி குறியீட்டுக்கு 23,100 புள்ளிகளில் கடுமையான டெக்னிக்கல் ரெசிஸ்டன்ஸ் இருக்கிறது. எனவே, சமீபத்திய ஏற்றத்துக்கு பிறகு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபத்தை வெளியே எடுத்துள்ளனர்

3 பங்கு சந்தையில் குறுகிய கால ஏற்ற இறக்கங்களையும், பதற்றத்தையும் குறிக்கும் 'நிப்டி வி.ஐ.எக்ஸ்.,' குறியீடு நேற்று ஒரே நாளில் 9 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது

4 வங்கிகள் மற்றும் நிதி சேவைகள் துறை பங்குகளில் விற்பனை அழுத்தம் நீடித்து வருகிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் லாப விகிதத்தில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

5 உலோகங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயருவதால் ஆட்டோமொபைல் துறை பங்குகளிலும் விற்பனை அழுத்தம் அதிகரித்துள்ளது. 'நிப்டி ஆட்டோ' குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளும் சரிவுடன் முடிவடைந்தன.

ஐ.டி., பங்குகள் ஏற்றம்



நேற்று 'நிப்டி ஐ.டி.,' குறியீடு 2.88 சதவீதம் உயர்ந்து 8 மாத உச்சத்தை தொட்டுள்ளது. விப்ரோ, இன்போசிஸ், ஹெச்.சி.எல்., டெக்னாலஜீஸ், டெக் மஹிந்திரா, எம்பசிஸ், பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ், டி.சி.எஸ்., ஆகிய பங்குகள் கிட்டத்தட்ட 3 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

முன்னணி ஐ.டி., நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருப்பதாலும், சர்வதேச சந்தையில் ஏ.ஐ., துறை பங்குகளில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருவதாலும், இந்திய ஐ.டி., சேவை நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து வருகின்றன. அக்டோபரில் மட்டும் இதுவரை நிப்டி ஐ.டி., குறியீடு 17 சதவீதம் உயர்ந்துள்ளது.

பங்கு சந்தை நிலைபெறுவதற்கு எண்ணெய் விலை தணிய வேண்டும்


குறுகிய கால அடிப்படையில் நிறுவனங்களின் வருமான வளர்ச்சி, இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஏற்படும் மாற்றங்கள், அன்னிய முதலீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பங்கு சந்தை நகரும். சந்தை நிலைபெறுவதற்கு கச்சா எண்ணெய் விலை, சர்வதேச கடன் பத்திர வருமானம், நாணய மதிப்பு ஏற்ற இறக்கங்கள் ஆகியவை தணிய வேண்டியது அவசியம்.
வினோத் நாயர்,
- ஆராய்ச்சி பிரிவு தலைவர்,
ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us