தங்கத்தை பரிசாக பெறும்போது இதையும் தெரிந்து கொள்வது நல்லது
தங்கத்தை பரிசாக பெறும்போது இதையும் தெரிந்து கொள்வது நல்லது
ADDED : அக் 22, 2025 12:29 AM

தங்கத்தை பரிசாக பெறுவது மகிழ்ச்சியான விஷயம் தான் என்றாலும் அதற்கு வரி உண்டா என்பதையும் தெரிந்துகொண்டு வாங்கினால் மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்கும்
உறவினர்களிடமிருந்து
குடும்ப உறவினர்கள் அதாவது பெற்றோர், உடன்பிறந்தவர்கள், மனைவி அல்லது கணவர் போன்றோர் தரும் தங்கப் பரிசுகளுக்கு எவ்வளவு மதிப்பு இருந்தாலும் வரி கிடையாது.
நண்பர்கள் அல்லது அன்னியர்களிடமிருந்து
ஒரு நிதியாண்டில், உறவினர் அல்லாதவர்களிடமிருந்து பெறும் பரிசின் மொத்த மதிப்பு 50,000- ரூபாயை தாண்டினால் மட்டுமே வரி செலுத்த வேண்டும். 50,000 ரூபாய் வரை வரி கிடையாது.
திருமண பரிசுகள்
திருமணத்தின்போது பெறும் அனைத்து பரிசுகளுக்கும் அதாவது எந்த மதிப்பிலும், யாரிடமிருந்தும் பெற்றாலும் முழு வரி விலக்கு உண்டு. ஆனால் தீபாவளி அல்லது பிறந்தநாள் போன்ற மற்ற விழாக்களுக்கு இந்த விலக்கு கிடையாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
முக்கிய குறிப்பு
இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி, தங்கத்தை பரிசாகப் பெறுவதற்கு எந்த குறிப்பிட்ட வரம்பும் இல்லை. ஆனால் யாரிடமிருந்து பெறுகிறீர்கள் என்பதைப் பொறுத்து வரி விதிகள் மாறுபடும்.