தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ எம்.சி.எக்ஸ்., பங்குகள் 28 சதவிகிதம் உயர வாய்ப்பு 'ஜெப்ரீஸ்' கணிப்பு

எம்.சி.எக்ஸ்., பங்குகள் 28 சதவிகிதம் உயர வாய்ப்பு 'ஜெப்ரீஸ்' கணிப்பு

எம்.சி.எக்ஸ்., பங்குகள் 28 சதவிகிதம் உயர வாய்ப்பு 'ஜெப்ரீஸ்' கணிப்பு


ADDED : ஜூலை 02, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 03:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின் முன்னணி கமாடிட்டி சந்தையான'எம்.சி.எக்ஸ்.,' பங்குகளை வாங்கலாம் என சர்வதேச தரகு நிறுவனமான 'ஜெப்ரீஸ்' பரிந்துரைத்துள்ளது. இந்நிறுவனம் குறித்து முதல் முறையாக ஆய்வை தொடங்கியுள்ளதாகவும், பங்கின் இலக்கு விலை 3,600 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் 'ஜெப்ரீஸ்' தெரிவித்துள்ளது. எனவே, தற்போதைய நிலையில் இருந்து கிட்டத்தட்ட 28 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளதாக ஜெப்ரீஸ் கணித்துள்ளது. இந்நிலையில், நேற்று இந்நிறுவனத்தின் பங்கு 4.40 சதவீதம் உயர்ந்து 2,962.00 ரூபாய்க்கு நிறைவடைந்தது.

முக்கிய அம்சங்கள்

1இந்தியாவில் கமாடிட்டி சந்தையின் வளர்ச்சி இன்னும் பங்கு சந்தையை விட பின்தங்கிய நிலையில் உள்ளது; இருப்பினும், எதிர்காலத்தில் அதன் பயன்பாடு அதிகரிக்கும்

2நாட்டின் முன்னணி வேளாண்மை அல்லாத கமாடிட்டி எக்ஸ்சேஞ்சாக உள்ள

எம்.சி.எக்ஸ்., இதனால் அதிகம் பயனடையும்

3புதிய சேவைகள் அறிமுகம் மற்றும் சிறு முதலீட்டாளர்களின் பங்கேற்பு அதிகரிப்பால், நிறுவனத்தின் வருவாய் அடுத்த சில ஆண்டுகளில் 20 சதவீத கூட்டுவளர்ச்சி விகிதத்தில் உயரக்கூடும்

4 செயல்பாட்டு லாப விகிதம் 260 அடிப்படை புள்ளிகள் உயர வாய்ப்பு; வரும் 2029ம் நிதியாண்டுக்குள் லாபம் 22 சதவீத ஆண்டுகூட்டு வளர்ச்சி விகிதத்தில் வளரக்கூடும்

5தற்போதைய இலக்கு விலைக்கு அப்பாலும், புதிய சேவைகள் உள்ளிட்ட கூடுதல் வாய்ப்புகள் பங்குக்கு மேலும் 15 முதல் 20 சதவீதம் வரை கூடுதல் உயர்வு வழங்கக்கூடும்.

இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us