10 ரூபாய்க்கும் தங்க முதலீடு 'ஜியோ பைனான்ஸ்' அறிமுகம்
10 ரூபாய்க்கும் தங்க முதலீடு 'ஜியோ பைனான்ஸ்' அறிமுகம்
ADDED : அக் 18, 2025 12:12 AM

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமுள்ளவர்கள், இனி 10 ரூபாய் இருந்தாலே போதும்; முதலீடு செய்யலாம் என புதிய திட்டத்தை ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, 'ஜியோ கோல்டு 24கே டேஸ்' என்ற சிறப்பு பண்டிகை கால திட்டத்தை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
குறைவான முதலீடு, அதிக பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் எளிதாக தங்கம் வாங்குவதை நோக்கமாகக் கொண்டு, இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறுகிய கால சலுகையின் ஒரு பகுதியாக, வரும் 23ம் தேதி வரை, ஜியோ பைனான்ஸ் அல்லது 'மை ஜியோ' செயலி வாயிலாக 2,000 ரூபாய் மற்றும் அதற்கு கூடுதலாக டிஜிட்டல் தங்கம் வாங்குவோருக்கு,
2 சதவீதம் கூடுதல் தங்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாங்கிய 72 மணி நேரத்துக்குள், இந்த கூடுதல் தங்கம் சம்பந்தப்பட்டவரது கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.