தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ கனோஹர் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்

 கனோஹர் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்

 கனோஹர் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்


ADDED : செப் 08, 2026 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 07:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மின்சார உள்கட்டமைப்பு துறையில் செயல்படும் இந்நிறுவனம், மின்மாற்றிகள் உற்பத்தி மற்றும் மின் பரிமாற்றம் தொடர்பான டர்ன்கீ இ.பி.சி., திட்டங்களில் கவனம் செலுத்துகிறது. உயர் மின்னழுத்த மின்மாற்றிகள், துணை மின் நிலையங்கள், மின் பரிமாற்ற வழித்தடங்கள் மற்றும் ரயில்வே மின்மயமாக்கலுக்கான மின்மாற்றிகளை தயாரிப்பதுடன், தொழில்நுட்ப கூட்டணி வாயிலாக ஜி.ஐ.எஸ்., உபகரணங்களையும் வழங்குகிறது. இதன் வாயிலாக மின் உள்கட்டமைப்பு துறையின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஐ.பி.ஓ., ஆரம்ப தேதி : 08-09-2026

ஐ.பி.ஓ., நிறைவு தேதி: 10-09-2026

பட்டியலிடப்படும் சந்தைகள்: என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ.,

பட்டியலிடப்படும் நாள்: 16-09-2026 (உத்தேசமாக)

திரட்டப்படும் தொகை : ரூ.1,055.74 கோடி வரை (அதிகபட்ச அளவு ரூபாயில்)

புதிய பங்குகள் வெளியீடு: ரூ.300.00 கோடி வரை (அதிகபட்ச அளவு ரூபாயில்)

ஆபர் பார் சேல்: ரூ.755.74 கோடி வரை (அதிகபட்ச அளவு ரூபாயில்)

முக மதிப்பு: ரூ.2

விலை வரம்பு: ரூ.601 - ரூ.632

விண்ணப்பிக்க குறைந்தபட்ச அளவு: எண்ணிக்கை: 23 பங்குகள்; தொகை: ரூ.13,823

சிறப்பம்சங்கள்

மின்மாற்றிகள் உற்பத்தியில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், மின் பரிமாற்றம், ரயில்வே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின் வினியோக துறைகளுக்கு சேவை வழங்குகிறது

500 மெகா-வோல்ட் ஆம்பியர், 400 கிலோ வோல்ட் வரையிலான மின்மாற்றிகளை உற்பத்தி செய்கிறது. இவற்றுக்கான ஷார்ட்-சர்க்யூட் சான்றிதழ் பெற்ற இந்தியாவின் 5 நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் உள்ள 2 ஆலைகளின் மொத்த உற்பத்தி திறன் 19,200 எம்.வி.ஏ., ஆகும். டேங்குகள், ரேடியேட்டர்கள் போன்ற முக்கிய உதிரிபாகங்களையும் தயாரிக்கிறது

ஆர்.டி.எஸ்.ஓ., சான்றிதழ் பெற்றுள்ளதால், ரயில்வே மின்மயமாக்கலுக்கான ஸ்காட் மின்மாற்றிகளையும், தொழில்நுட்ப கூட்டணி வாயிலாக 252 கே.வி., வரையிலான ஜி.ஐ.எஸ்., உபகரணங்களையும் தயாரிக்கிறது

மின்மாற்றிகளை விற்பனை செய்வதுடன், 400 கே.வி., வரையிலான துணை மின் நிலையங்கள் மற்றும் மின் பரிமாற்ற வழித்தடங்களுக்கான டர்ன்கீ இ.பி.சி., திட்டங்களையும் மேற்கொள்கிறது

மின் கட்டமைப்பு விரிவாக்கம், ரயில்வே மின்மயமாக்கல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மற்றும் அதிக மின்னழுத்த மின்மாற்றிகளுக்கான தேவை ஆகியவை எதிர்கால வளர்ச்சிக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு.

ரிஸ்க்குகள்

வருவாய் குறைந்த எண்ணிக்கையிலான முக்கிய வாடிக்கையாளர்கள் மற்றும் அரசு ஒப்பந்தங்களை அதிகம் சார்ந்துள்ளது. ஆர்டர்கள் குறைந்தாலோ, ஒப்பந்தங்கள் கிடைக்காவிட்டாலோ வருவாய் பாதிக்கலாம்

காப்பர், ஸ்டீல், டிரான்ஸ்பார்மர் ஆயில் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கு வெளி சப்ளையர்களை சார்ந்துள்ளது. விலை உயர்வு அல்லது வினியோக தடை லாப வரம்பை பாதிக்கலாம்

திட்டங்களை முடிக்க நீண்ட காலம் தேவைப்படுவதால், செயல்பாட்டு மூலதன தேவை அதிகமாக இருக்கலாம்

திட்ட தாமதங்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் பணப்புழக்கம் பாதிக்கப்படலாம்

மின்மாற்றி மற்றும் மின் உள்கட்டமைப்பு துறையில் கடும் போட்டி நிலவுகிறது. அரசு கொள்கை மாற்றங்கள், விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஆர்டர்கள் மற்றும் லாப வரம்பில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்

நிறுவனத்தின் கடன் மற்றும் அதனுடன் தொடர்புடைய வட்டி, பணப்புழக்க சுமையையும் கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

கவனம்: முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us