தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஏ.ஐ., உதவியுடன் களமிறங்கும் 'கிவி ஜெனரல் இன்சூரன்ஸ்'

 ஏ.ஐ., உதவியுடன் களமிறங்கும் 'கிவி ஜெனரல் இன்சூரன்ஸ்'

 ஏ.ஐ., உதவியுடன் களமிறங்கும் 'கிவி ஜெனரல் இன்சூரன்ஸ்'


ADDED : ஜூன் 09, 2026 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 03:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ ந்தியாவின் 3.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொது காப்பீட்டு சந்தையில், 'டாடா ஏ.ஐ.ஜி.,' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நீலேஷ் கார்க் மற்றும் 'வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல்' நிறுவனமும் இணைந்து 70:30 என்ற பங்கு விகிதத்தில் 'கிவி ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

முதற்கட்டமாக, 150 கோடி ரூபாய் மூலதனத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம், நடப்பு ஆண்டிற்குள் மேலும் 500 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் மொத்த பிரீமியம் வருவாய் எட்டுவதை இலக்காக கொண்டுள்ளது.

காப்பீட்டு துறையில் பாலிசி புதுப்பித்தல் மற்றும் ஆவணம் சரிபார்ப்பு போன்ற பரிவர்த்தனைகளுக்கு செலவிடப்படும் 80-90 சதவீதம் நேரத்தை, மியூச்சுவல் பண்டு துறை போல 5-10 சதவீதமாக குறைக்கும் நோக்கில், பிரீமியம் நிர்ணயம், கிளைம்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை என அனைத்தும் ஆரம்பத்திலிருந்தே ஏ.ஐ., தொழில்நுட்ப அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us