UPDATED : அக் 11, 2025 01:22 AM
ADDED : அக் 11, 2025 01:18 AM

கோ ட்டக் மியூச்சுவல் பண்டு நிறுவனம், வெள்ளி இ.டி.எப்., திட்டங்களில் மொத்த முதலீடுகள் மற்றும் சுவிட்ச் இன் முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிறுத்தம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
![]() |
இந்திய வெள்ளி சந்தையில் ஏற்பட்டுள்ள தீவிர பற்றாக்குறையால், வெள்ளியின் விலை, சர்வதேச விலையை விட அதிக பிரீமியத்தில் வர்த்தகமாகிறது. முதலீட்டாளர்கள் அதிக பிரீமியத்தில் சந்தையில் நுழைவதிலிருந்து பாதுகாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்; ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு பிரீமியம் திரும்பியவுடன், மீண்டும் முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஏற்கனவே உள்ள எஸ்.ஐ.பி., மற்றும் எஸ்.டி.பி., வாயிலாக முதலீடுகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
![]() |
சவால்
* கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும், வெள்ளி இ.டி.எப்., 7.50 முதல் 11.20 சதவிகிதம் வரை, உயர்வு கண்டுள்ளது
* நடப்பாண்டில் இதுவரை வெள்ளி இ.டி.எப்., 86 சதவிகிதம் அளவுக்கு உயர்வு
* சர்வதேச சந்தையில், நேற்று வெள்ளி விலை 2.60 சதவீதம் உயர்வு கண்டு, ஒரு அவுன்ஸ் 51.30 அமெரிக்க டாலரை தாண்டி உள்ளது
* ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை, 50 அமெரிக்க டாலருக்கு மேல் வர்த்தகமானது 1980க்கு பிறகு இதுவே முதல்முறை
* சர்வதேச அளவில் தேவை அதிகரித்து வரும் நிலையில், கையிருப்பு அடிப்படையில், புதிய வெள்ளி இ.டி.எப்., உருவாக்குவது சவாலாக இருப்பதாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.