நிப்டி 29,000 புள்ளிகளை எட்டும் 'கோட்டக் செக்யூரிட்டீஸ்' கணிப்பு
நிப்டி 29,000 புள்ளிகளை எட்டும் 'கோட்டக் செக்யூரிட்டீஸ்' கணிப்பு
UPDATED : டிச 12, 2025 01:50 AM
ADDED : டிச 12, 2025 01:49 AM

அடுத்த ஆண்டின் இறுதிக்குள், தேசிய பங்குச் சந்தை குறியீடான 'நிப்டி' 12 சதவீதம் உயர்ந்து, 29,120 புள்ளிகளை எட்ட வாய்ப்புள்ளதாக தரகு நிறுவனமான 'கோட்டக் செக்யூரிட்டீஸ்' கணித்துள்ளது.
இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, அடுத்த ஆண்டில் 17 சதவீதமாக உயரும் என்றும்; வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் சாதகமான கொள்கை முடிவுகளால் இது சாத்தியமாகும் என்றும் கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் 'ஸ்ரீபால் ஷா' தெரிவித்துள்ளார்.
![]() |
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வங்கி, நிதிச் சேவை மற்றும் காப்பீடு, தகவல் தொழில்நுட்பம், ஹெல்த்கேர் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகள் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதகமான காரணிகள் வலுவாக இருந்தால், நிப்டி, அதிகபட்சமாக 32,032 புள்ளிகள் வரை கூட உயரும். எதிர்மறையான சூழல் என்றால் 26,208 புள்ளிகள் வரை குறையவும் வாய்ப்புள்ளது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.50 லட்சம் ரூபாயாக உயர வாய்ப்புள்ளது. வெள்ளி மீது ஆர்வம் அதிகரித்து வருவதால், ஒரு கிலோ 2.10 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள், நிப்டி அதிகபட்சமாக 32,032 புள்ளிகள் வரை உயரவும், சரியும்பட்சத்தில் 26,208 புள்ளிகள் வரை இறங்கவும் வாய்ப்புள்ளது.


