டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் தொடர அறிகுறிகள் குறைவாகவே உள்ளன
டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் தொடர அறிகுறிகள் குறைவாகவே உள்ளன
UPDATED : டிச 12, 2025 01:56 AM
ADDED : டிச 12, 2025 01:52 AM

நிப்டி
சிறியதொரு இறக்கத்துடன் ஆரம்பித்து, 10 மணிக்கு மேல் தொடர்ந்து ஏற்றம் கண்ட நிப்டி, நாளின் இறுதியில் 140 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 16-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்கேப்50' குறியீடு அதிக பட்சமாக 1.01 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு குறைந்தபட்சமாக 0.42 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 17 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில், 'நிப்டி மிட்ஸ்மால் ஐ.டி., அண்டு டெலிகாம்' குறியீடு அதிகபட்சமாக 1.92 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மீடியா' குறியீடு அதிக பட்சமாக 0.09 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வர்த்தகம் நடந்த 3,206 பங்குகளில், 1,919 ஏற்றத்துடனும்; 1,183 இறக்கத்துடனும்; 104 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. திடீர் ஏற்றம் வந்த போதிலும் ஏற்றம் தொடர்வதற்கான டெக்னிக்கல் அறிகுறிகள் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. தற்போதைக்கு 25,700-க்கு அருகில் நல்ல சப்போர்ட், 26,000-த்தில் நல்லதொரு ரெசிஸ்டென்ஸ் இருக்கிறது என்று மட்டுமே சொல்லலாம். சர்போர்ட்டை உடைத்தால், இறக்கம் தொடரவும், ரெசிஸ்டென்ஸை உடைத்தால் ஏற்றம் தொடரவும் வாய்ப்புள்ளது.
நிப்டி பேங்க்
ஆரம்பத்தில் சிறிய இறக்கத்துடன் துவங்கிய நிப்டி பேங்க், பின் ஏற ஆரம்பித்து, இறுதியில் 249 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. ஏற்றம் வந்தால் லாபத்தை வெளியே எடுக்கும் வகையிலான விற்பனை வந்துவிடுகிறது என்பதால், இன்னமும் ஏற்றத்திற்கான முழுமையான வேகம் நிப்டி பேங்கில் உருவாகவில்லை. 58,600-க்கு கீழே போனால் இறக்கமும்; 59,600-க்கு மேலே போனால் ஏற்றமும் வந்துவிட வாய்ப்புள்ளது என்பதை மட்டுமே தற்போதைய டெக்னிக்கல் சூழல் காட்டுகின்றது.






