UPDATED : டிச 12, 2025 01:30 AM
ADDED : டிச 12, 2025 01:26 AM

ரூ.2 லட்சம் கோடியை தாண்டிய 'ஐச்சர்'
'ரா யல் என்பீல்டு' நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'ஐச்சர் மோட்டார்ஸ்' பங்குகள், மும்பை பங்கு சந்தையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 1 சதவீதம் உயர்ந்து, 7,324 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியது. இதனையடுத்து, இந்நிறுவன சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. மேலும் 'பஜாஜ் ஆட்டோ' நிறுவனத்துக்கு பின்னர், 2 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய, இரண்டாவது இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாகியுள்ளது.
'கிரிப்டோ' பரிவர்த்தனை 'டாப் 10'ல் இந்தியா
![]() |
உ லகளவில் கிரிப்டோ கரன்சியை பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் டாப் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ச்சி கண்டு இருப்பதாக 'உலக கிரிப்டோ ரேங்கிங் 2025' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்லரை பயனர்கள் மற்றும் ஸ்டேபிள் காயின்களின் பயன்பாடு அதிகரிப்பால், டாப் 10 நாடுகளில், இந்தியா 9வது இடத்தைப் பிடித்துள்ளது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையில் உக்ரைன் முதலிடமும், அமெரிக்கா இரண்டாவது இடமும் பிடித்துள்ளன.


