'லென்ஸ்கார்ட்' பங்கு விலை கிரே மார்க்கெட்டில் சரிவு
'லென்ஸ்கார்ட்' பங்கு விலை கிரே மார்க்கெட்டில் சரிவு
ADDED : அக் 31, 2025 02:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'லென்ஸ்கார்ட்' நிறுவனத்தின் ஐ.பி.ஓ., இன்று தொடங்கும் நிலையில், 'கிரே மார்க்கெட் பிரீமியம்' எனப்படும் சந்தைக்கு வெளியே நடைபெறும் பங்கு விற்பனையின் விலை, நேற்று 11.9 சதவீதம் சரிந்துள்ளது. சில நாட்களுக்கு முன் இது, 27 சதவீதமாக இருந்தது. இந்த  பிரீமியம் குறைவது, ஐ.பி.ஓ.,வுக்கு முன்னதாக முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் குறைந்து வருவதை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. புதிய பங்கு வெளியீடு வாயிலாக, லென்ஸ்கார்ட் 7,278 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

