ADDED : பிப் 25, 2026 01:24 AM

உலகளாவிய பொருளாதார மாற்றங்களாலும், 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சியாலும் இந்திய ஐ.டி., நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதனால், பொதுத்துறை நிறுவனமான 'எல்.ஐ.சி.,' கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 42,500 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பைச் சந்தித்துள்ளது.
இந்நிறுவனம், தனது முதலீட்டில் பெரும்பகுதியை ஐ.டி., துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் வைத்திருக்கிறது. குறிப்பாக, 'இன்போசிஸ் மற்றும் டி.சி.எஸ்.,' ஆகிய நிறுவனங்களில் அதிக அளவு வைத்து உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த இரண்டு நிறுவனங்களில் பங்கு விலை வீழ்ச்சியினால் மட்டும் எல்.ஐ.சி.,க்கு ரூ.26,510 கோடி ரூபாய் மதிப்பு குறைந்து உள்ளது.
2025 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, எல்.ஐ.சியின் மொத்த பங்கு முதலீடு 17.83 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இதில் ஐ.டி., துறை சார்ந்த பங்குகளில் 2.17 லட்சம் கோடி முதலீட்டை கொண்டுள்ளது. மொத்த முதலீட்டில் இது 12.43 சதவீதம் ஆகும்.

